தேர்தல் ஆனையம் நேர்மையாக நடத்த கொள்ள வேண்டும் என்றும் பாஜக, அதிமுக மீது மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர் எனவும் கடலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
அவர், “பாஜக தேர்தல் அறிக்கையில், மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும், குற்ற வழக்குபதிவு செய்யபடும் என உள்ளது இதனை அதிமுக ஏற்று கொள்கிறதா என கேள்வி எழுகிறது. ஏற்கனவே அதிமுக மதமாற்ற தடை சட்டம் கொண்டுவந்து அதை வாபஸ் பெற்றவர்கள்.
10 ஆண்டு ஆட்சி காலத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாவு விலை உயர்நதுள்ளது. பாஜக மற்றும் அதிமுக மீது மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளார்கள். வாஷிங் மிஷின் இலவசமாக வழங்குபடும் என கூறுகிறார்கள் ஏற்கனவே தண்ணீர் பிரச்னை உள்ள நிலையில், வாஷிங் மிஷினை தருவதாகக் கூறுகின்றனர்.
Must Reads : திமுகவில் மு.க. ஸ்டாலின் தலைவராக தன்னை நிரூபித்த தருணம்
அதிமுக நம்பி இருப்பது ஒன்றை மட்டும்தான், அது தேர்தல் நேரத்தில் அவர்கள் அதிகாரங்களை வைத்துக் கொண்டு மக்களுக்கு ப
ணத்தை கொண்டு சென்று கொடுக்கிறார்கள். எனவே, தேர்தல் ஆனையம் நேர்மையாக நடத்த கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.