Home /News /tamil-nadu /

தமிழ் புத்தாண்டுக்கு ஆளுநர் தேநீர் விருந்து... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புறக்கணிப்பு

தமிழ் புத்தாண்டுக்கு ஆளுநர் தேநீர் விருந்து... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புறக்கணிப்பு

ஆர்.என்.ரவி, சு.வெங்கடேசன்

ஆர்.என்.ரவி, சு.வெங்கடேசன்

தமிழக மக்களின்  உணர்வுகள்  பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில்  சிபிஐஎம் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று சிபிஎம் அறிவித்துள்ளது.

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்துள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPM) கட்சி அறிவித்துள்ளது.

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ளும்படி முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி பெயரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆளுநரின் இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் கலந்துகொள்ளும்படி ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளது.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் குரலையும் தமிழக மக்களின் கோரிக்கைகளையும் முற்றாக நிராகரிப்பதோடு, அரசுக்கு மேலானதொரு அதிகார மையமாக செயல்பட தொடர்ச்சியாக ஆளுநர் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதை படிக்க: அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்துவது தொடர்பாக பிரச்னை - பட்டவர்த்தி கிராமத்தில் 5 நாட்களுக்கு 144 தடை


    மேலும் தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதா உள்ளிட்டவற்றை குடியசுத் தலைவருக்கு  அனுப்பி வைக்காமல் தமிழக சட்டமன்றத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் நடவடிக்கைகள், துணைவேந்தர் நியமன பிரச்சனை, இந்தியாவின் பன்மைத்துவத்தை நிராகரிக்கும் உரை போன்ற நடவடிக்கைகளால் தமிழக மக்களின்  உணர்வுகள்  பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில்  சிபிஐஎம் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட யாரும் பங்கேற்க மாட்டார்கள்’ என்று தெரிவித்துள்ளது.

    மேலும் படிங்க: பிரதமரும், நிதி அமைச்சரும் பொறுப்பில் இருக்கும் வரை இந்தியாவில் விலைவாசி குறைய வாய்ப்பில்லை - கார்த்தி சிதம்பரம்


    இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இவ்வழைப்பிதழ் மாற்றத்தக்கதல்ல, ஆனால் நிராகரிக்கத்தக்கது. தமிழக சட்டமன்ற தீர்மானங்களை நிறுத்திவைத்து, தமிழக மக்களின் உரிமையை அவமதிக்கும் ஆளுநரின் தேநீர் அழைப்பை நிராகரிக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    அடுத்த செய்தி