Home /News /tamil-nadu /

அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல- சிபிஐ(எம்) கண்டனம்

அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல- சிபிஐ(எம்) கண்டனம்

தமிழக கவர்னர் ஆர்.என். ரவியுடன் ரஜினிகாந்த்

தமிழக கவர்னர் ஆர்.என். ரவியுடன் ரஜினிகாந்த்

ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலை பேச வேண்டிய அவசியம் ஆளுநருக்கு எதனால் வந்தது. இதன் மூலம் அரசியல் சட்ட விதிக்கு விரோதமான முறையில்,ஆளுநர் அலுவலகம் ஒரு அரசியல் கூடமாக மாற்றப்பட்டுள்ளது உறுதியாகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    ஆளுநர் ஆர்.என்.ரவி உடனான சந்திப்பில் அரசியல் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் கூறிய நிலையில், அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல என்றும் சிபிஐ(எம்) மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று  சந்தித்து பேசினார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பு தொடர்பாக போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், காஷ்மீரில் பிறந்து வட மாநிலங்களிலேயே இருந்த ஆளுநர், தமிழ்நாட்டை மிகவும் நேசித்துள்ளார். தமிழர்களின் நேர்மை, கடின உழைப்பு ஆகியவை ஆளுநரை மிகவும் கவர்ந்துள்ளது. இங்குள்ள ஆன்மிக உணர்வு அவரை இழுத்துள்ளது.

    தமிழகத்தின் நன்மைக்காக எதை செய்யவும் தயாராக உள்ளேன் என ஆளுநர் கூறியதாக தெரிவித்தார். ஆளுநருடனான சந்திப்பின்போது அரசியல் குறித்து பேசியதாகவும் அதனை வெளியில் கூற முடியாது எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். ஆள்நருடன் அரசியல் பேசியதாக தெரிவித்த ரஜினிகாந்த்தின்  கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



    இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழ்நாடு ஆளுநரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  சந்தித்து பேசி உள்ளார். மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்திப்பது ஏற்புடையதே. ஆனால்அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து 'தாங்கள் அரசியல் பேசியதாகவும் அந்த அரசியலை ஊடகங்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியாது' எனவும்  ரஜினிகாந்த் தெரிவித்து இருப்பது வித்தியாசமாக உள்ளது.

    இதையும் படிங்க: ஆளுநருடன் அரசியல் பேச்சு.. ஜெயிலர் சூட்டிங் தேதி: ரஜினிகாந்த் வெளியிட்ட தகவல்

    ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல. ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதியாக செயல்படவும் கூடாது. அப்படி இருக்கையில், ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலை பேச வேண்டிய அவசியம் ஆளுநருக்கு எதனால் வந்தது. இதன் மூலம் அரசியல் சட்ட விதிக்கு விரோதமான முறையில்,ஆளுநர் அலுவலகம் ஒரு அரசியல் கூடமாக மாற்றப்பட்டுள்ளது உறுதியாகிறது.

    மேலும் படிக்க: அதிமுக சின்னத்தை முடக்கி, ரஜினியை முன்னிறுத்தி நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக திட்டம்? கே.சி.பழனிசாமி

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நாடு அரசுக்கு மாற்றாக, ஒரு போட்டி அரசு நடத்தும் அலுவலகமாக ஆளுநர் மாளிகை மாற்றி, கண்டனத்திற்கு ஆளானது. இப்போது அதன் அடுத்த கட்டமாக, அரசியல் அலுவலகமாகவும் அது மாற்றப்படுகிறது.இது தமிழ் நாட்டு மக்கள் நலனுக்கு விரோதமானது. தொடர்ந்து அதிகார வரம்பு மீறியே செயல்படும் ஆளுநரின் இந்த போக்கினை இன்னும் எத்தனை காலம் பொறுத்துக்கொள்ளப் போகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: CPM balakrishanan, Rajinikanth, RN Ravi

    அடுத்த செய்தி