தமிழகத்தில் வகுப்பு வாதம் தலை தூக்காமல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பின்போது முத்தரசன் கூறுகையில், மாநில உரிமைகளை பாதுகாப்பதில் மக்களுக்கு நன்மை செய்வதில் திமுக சிறப்பாக செயல்படுகிறது என்று தெரிவித்தார்.
மாநில உரிமைகளை பறிக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுவது நாட்டின் ஒற்றுமை ஒருமைபாட்டை சீர்குலைக்கும் செயலாகும் என்று கண்டனம் தெரிவத்த அவர், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது நல்லதல்ல என்றும், ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சி நடந்து வருகிறது. முழுமையாக தனியார் மயம் ஆக்கும் நடவடிக்கை தவறானது என்றும் மக்கள் நலனை காட்டிலும் கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது எனவும் கூறினார்.
தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு நகர்புற தேர்தலை நடத்த அரசு முனைப்பு காட்டியுள்ளது வரவேற்கதக்கது என்றும், 10 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாதது சிரமத்தை ஏற்படுத்தியது எனவும், 10 ஆண்டுகளாக தேர்தல் நடக்காதத குறைபாடு தற்போது முடிவுக்கு வந்துள்ளது என்றும் கூறினார்.
சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலை போல, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்தலிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முக்கியத்துவத்துடன் பங்கேற்கும் என்றும், இந்த தேர்தலில் வகுப்பு வாதம் சார்ந்த கட்சிகள் வெற்றி பெறகூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.
பாஜகவின் பகீர முயற்சிக்கு அதிமுக பலியாகியுள்ளதாக குற்றம் சாட்டிய முத்தரசன், நாட்டின் மதச்சார்பின்மை கொள்கை மத்திய அரசால் சீர்குலைக்கப்பட்டு வருகிறது என்றும் இதனால், பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நாடு முழுதும் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தார்.
Read More : பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
ஊழல் குறித்து பேச அதிமுகவுக்கு தார்மீக தகுதி இல்லை என்று குற்றம் சாட்டிய முத்தரசன், பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில் நடந்த குறைபாடுகளை ஆய்வு செய்து, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினார்.
Must Read : பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது வழக்குப்பதிவு
மேலும், திமுக கூட்டணியில் நாங்கள் மைனாரிட்டி பார்ட்னர் இல்லை என்றும், திமுக தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தபட்டுள்ளது. அதில், சுமுகமான தீர்வு எட்டபடும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். எந்த அரசாங்கமாக இருந்தாலும் மக்களுக்கு பிரச்சனை ஏற்படுத்தினால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் பிரச்சனைக்காக போராடி, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, CPI, DMK Alliance, Local Body Election 2022