சென்னையில் உள்ள கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் “இந்தியா கொரோனாவை எதிர்கொள்வதற்கு முன்பில் இருந்தே இந்திய பொருளாதாரம் நலிந்துபோய் இருந்தது. கொரோனா தொற்று ஏற்பட்டதும் மேலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியா வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
23 கோடி மக்கள் வருமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் பெட்ரோல் விலை குறையவில்லை. மத்திய அரசு விதிக்கும் வரிதான் பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம். கொரோனாவிற்கு பிறகு கல்வித்துறையும் நெருக்கடியை சந்தித்துள்ளது. ஸ்மார்ட் போன் வாங்க வசதி இல்லாத குழந்தைகள் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் குழந்தைகள் என புதிய ஏற்றத்தாழ்வை உருவாக்கியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மோடி அரசின் கொள்கை இந்தியாவை நாசப்படுத்தியுள்ளது. மத்திய நிதி அமைச்சர், பிரதமர் அறிவித்த அறிவிப்புகள் கார்ப்பரெட் நிறுவனங்கள், பெரு முதலாலிகள் கொல்லை அடிக்கும் அறிவிப்புகளாக உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மையம் ஆக்குகிறார்கள். அன்னிய முதலீடுகளுக்கு கதவுகளை திறந்து விட்டிருக்கிறார்கள். கொரோனாவை பயன்படுத்தி பொதுத்துறை வங்கிகளை தனியார் வசம் ஒப்படைக்க முயல்கிறது மத்திய அரசு.
இந்தியாவில்தான் அதிக மக்கள் பட்டினிக்கிடக்கிறார்கள். மோடி அரசின் கொள்கை இந்தியாவை நாசப்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்ட 2020ல் அதை எதிர்கொள்ள மத்திய அரசு தாயாரவதை விடுத்து அமெரிக்க அதிபரை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்க திட்டமிட்டுக் கொண்டிருந்தது.
தமிழகம் உட்பட பல மாநிலங்கள் தடுப்பூசி கிடைக்காமல் தவித்துவருகிறது. பொருளாதாரத்தை மீட்டெடுப்பதிலும் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதிலும் பாஜக படுதோல்வி அடைந்துவிட்டது. பாஜக மக்களின் செல்வாக்கை இழந்துவருகிறது. மோடியின் தவறான கொள்கைதான் இதற்கு காரணம். ஸ்டேன்சாமி மரணம் அல்ல அது கொலை.
சாதிகள் இல்லாத இந்தியாதான் தேவை என ஆர்.எஸ்.எஸ் பேச தயாரா? இந்தியாவை நெருக்கடியில் இருந்து மீட்க்கவேண்டும் என்றால் பாஜக-வை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும். நாட்டையும் மக்களையும் காபாற்ற பாஜக-விற்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரளவேண்டும்.
Read More : அடுத்த ஆபத்து தமிழகத்திற்கு வந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது - ராமதாஸ்
கொங்கு நாடு குறித்து பேசுபவர்கள் தமிழ்நாட்டின் வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும். அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டு தற்போது கடன்கார மாநிலமாக உள்ளது. திமுக அரசு தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நல்ல முயற்சி மேற்கொண்டுவருகிறது. திமுக அரசை இந்திய கம்யூனிட் கட்சி பாராட்டுகிறது.
Must Read : தமிழகத்தில் கல்லூரி திறப்பு எப்போது? - அமைச்சர் க.பொன்முடி பதில்
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் ஒன்றிய அரசு அதை புரிந்து கொள்ளவில்லை. திமுக வை ஆதரிக்க வேண்டும் என்பதற்க்கா இந்திய கம்யூனிஸ்ட் நீட் தேர்வை எதிர்க்கவில்லை. இந்தியா போன்ற பெரிய நாட்டில் தமிழகம் போன்ற ஒரு பெரிய மாநிலம் நீட் தேர்வை எதிர்த்தாலும் அதை நிறுத்த வேண்டும். எல்லா அதிகாரங்களையும் ஒன்றிய அரசு கையில் வைத்துக்கொள்வத்காகவும் வகுப்புவாதத்தையும் மதவாதத்தை கையில் எடுக்கவும் பாஜக முயல்கிறது.” இவ்வாறு டி.ராஜா கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, CPI, D Raja, Narendra Modi