மு.க.அழகிரி பாஜகவில் இணைகிறாரா? : சி.பி.ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேச்சு

மு.க.அழகிரி

4 இடங்களை பெற்றுள்ள நாம் 140 இடங்கள் பெறும் வரை அயராது உழைக்க வேண்டும் என்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.

 • Share this:
  மதுரையில் இருந்து அழகிரியும் விரைவில் பாஜகவில் இணைகின்ற நாளை நாம் உருவாக்கி காட்டுவோம் என நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.

  ‘மக்கள் ஆசி யாத்திரை’ பாஜக சார்பில் நடைபெபெற்று வருகிறது. அந்த யாத்திரையின் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  நிகழ்ச்சியில் பேசிய பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் தாமரை மலரப்போகும் நாள் உருவாக போகிறது. அந்த நாள் வரப்போகிறது என்பதற்குதான் வி.பி.துரைசாமி, ராமலிங்கம் ஆகியோர் வந்து பறைசாற்றுகிறார்கள்.

  நாம் ஒரு நாளை உருவாக்க போகிறோம். விரைவில் மதுரையில் இருந்து அழகிரியும் பாஜகவில் இணைகின்ற நாளை நாம் உருவாக்கி காட்டுவோம். 4 இடங்களை பெற்றுள்ள நாம் 140 இடங்கள் பெறும் வரை அயராது உழைக்க வேண்டும்” என்று கூறினார்.

  சி.பி.ராதாகிருஷ்ணன்


  Must Read : அடுத்த சட்டமன்ற தேர்தலில் 150 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் - அண்ணாமலை

  இந்நிலையில், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லும் விதமாக மேற்கொள்ளப்படும் இந்த “மக்கள் ஆசி யாத்திரை” நிகழ்ச்சில் திருப்பூரில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “எல்.முருகன் பாஜக மாநில தலைவராக இருந்தபோது சட்டமன்ற தேர்தலில் 4 பேரை வெற்றி பெற வைத்ததார். அவர்கள் 4 பேரும் திமுக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையின் குறைகளை சுட்டிக்காட்டி பேசி வருகிறார்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தமிழகத்தில் திராவிடம் என்கிற மாயையை நிச்சயம் உடைத்துக் காட்டுவோம். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 150 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்” என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: