மின்சாரம் தாக்கி பசுமாடும் காப்பாற்றச் சென்ற மூதாட்டியும் உயிரிழப்பு: மற்ற பசுக்களை குரைத்து காப்பாற்றிய நாய்..

மானாமதுரை அருகே மின்சாரம் தாக்கியதில் பசுமாடும் காப்பாற்றச் சென்ற மூதாட்டியும் உயிரிழந்தனர்.

மின்சாரம் தாக்கி பசுமாடும் காப்பாற்றச் சென்ற மூதாட்டியும் உயிரிழப்பு: மற்ற பசுக்களை குரைத்து காப்பாற்றிய நாய்..
மானாமதுரை அருகே மின்சாரம் தாக்கியதில் பசுமாடும் காப்பாற்றச் சென்ற மூதாட்டியும் உயிரிழந்தனர்.
  • Share this:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரம்  பைபாஸ் ரோட்டில் மாடு மேய்க்க சென்ற மூதாட்டி மற்றும் பசுமாடு இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மானாமதுரை அருகே ராஜகம்பீரம் பகுதியை சேர்ந்தவர் வேட்டைகால் 60 வயது மூதாட்டி. தினந்தோறும் மூன்று மாடுகளை அழைத்துக்கொண்டு மாடு மேய்க்க செல்வது வழக்கம். நேற்று இரவு காற்றுடன்  மழை பெய்ததில் மின் வயர் அறுந்து வேலியின் மேல் கிடந்து உள்ளது .

இதில்  சினை பசுமாடுகள் இரண்டு வேலி அருகே சென்றது. அப்போது அறுந்து கிடந்த மின் வயரை கடந்த போது மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் கத்திய மாட்டை பார்த்த மூதாட்டி வேட்டைகால் என்னவென்று தெரியாமல் மாட்டின் அருகே சென்று உள்ளார்.


அப்போது அவரையும் மின்சாரம் தாக்கி இறந்த மாட்டின் மீது விழுந்து அவரும் சம்பவ இடத்தில் இறந்தார். அவர் அழைத்து வந்திருந்த நாய் மற்ற இரண்டு மாடுகளை வர விடாமல் குறைத்து நிறுத்தி உள்ளது. இதனை கண்டு காப்பாற்றச்சென்ற அவரது உறவினர் பெண் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டார். நல்வாய்ப்பாக அவர் உயிர்தப்பினார்.மேலும் படிக்க...#BREAKING | இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் பிரதமர் மோடி

இறந்தவர் இருவரின் அருகேயே அவர் கூட்டி வந்த நாய் படுத்து சோகத்தில் இருந்துள்ளது. இறந்த வேட்டைகால் மூதாட்டி  மீது உருண்டு பிரண்டு பாசத்தை காண்பித்தது. அங்கு உள்ளவர்களை கண் கலங்க வைத்தது . தொடர்ந்து அந்த பகுதியில் அதிகமாக தாழ்வான மின் கம்பிகள் இருப்பதாகவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க சொன்னலும் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பதில்லை எனவும் இந்த பகுதி பொது மக்களின் குற்றச்சாடாக உள்ளது.
First published: August 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading