பூனேவிலிருந்து 4,20,570 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் தமிழகம் வந்தது

கோவிஷீல்டு

பூனேவிலிருந்து 4,20,570 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

  • Last Updated :
  • Share this:
    தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்படும் கோவீஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த தமிழக அரசு முடிவு செய்தது தடுப்பூசி செலுத்தி வந்தனர். தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை முழுமையாக வழங்காமல் குறைவாகவே வழங்குகிறது என்ற புகார் உள்ளது. இதையடுத்து தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என்று மாநில அரசு வலியுறுத்தி வருகிறது.

    இந்நிலையில் பூனோவில் இருந்து 52 பெட்டிகள் அடங்கிய 4,20,570 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது, தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை DMS வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டது.

    இந்த தடுப்பூசி மருந்துகள் 45 வயதிற்க்கும் மேற்பட்டவர்களுக்கு போடப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
    Published by:Vijay R
    First published: