கொரோனா தடுப்பூசி : இன்று 2-ம் கட்ட 'டோஸ்'

கோப்பு படம்

தமிழகத்தில், இதுவரை கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து 2,11,484 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளனர்.

 • Share this:
  தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட சுகாதார பணியாளர்களுக்கு இன்று இரண்டாவது கட்ட 'டோஸ்' செலுத்தப்படுகிறது.

  கடந்த ஜனவரி 16-ம் தேதி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு முறையான வழிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி போடப்பட்டது.

  இதையடுத்து, 28 நாட்களுக்குப் பின் மீண்டும் இரண்டாவது தவணையாக 'டோஸ்' செலுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஏற்கனவே தடுப்பூசி போட்டுகொண்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்று இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

  தமிழகத்தில், இதுவரை கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து 2,11,484 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளனர்.

  இந்நிலையில், கடந்த ஜனவரி 16-ம் தேதி தடுப்பூசி போட்டுக்கொண்ட 3, 126 சுகாதார பணியாளர்கள் மட்டும் இன்று இரண்டாவது 'டோஸ்' தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முதல் முறை போட்டுக் கொண்டே அதே மையத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இரண்டாவது டோஸ் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட நபருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக போலீசார், தூய்மைப் பணியாளர்கள் உட்பட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

  இதையடுத்து, நாடு முழுவதும் மார்ச் முதல் வாரத்தில் 50 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் கூட்டு நோய் உள்ளோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, விரைவில் மூன்றாம் கட்டமாக பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
  Published by:Vijay R
  First published: