ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

“ஒரே இடத்தில் 3 பேருக்கு கொரோனா.. அந்த ஏரியால இருக்க எல்லாரும் டெஸ்ட் எடுக்கணும்” - அமைச்சர் மா.சுப்பிரமணியம்

“ஒரே இடத்தில் 3 பேருக்கு கொரோனா.. அந்த ஏரியால இருக்க எல்லாரும் டெஸ்ட் எடுக்கணும்” - அமைச்சர் மா.சுப்பிரமணியம்

மா. சுப்பிரமணியன்

மா. சுப்பிரமணியன்

நாள்தோறும் 4000 பேருக்கு RT-PCR பரிசோதனை நடைபெற்று வருகிறது. அதில் பாதிப்பு எண்ணிக்கை வெறும் ஒற்றை இலக்கத்தில் உள்ளது. - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

தமிழ்நாட்டில் ஒரே பகுதியில் 3 பேருக்கு மேல் கொரோனா அறிகுறிகள் இருந்தால், அங்கு வசிக்கும் அனைவருக்கும் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பி.எஃப் 7 (BF 7) ஓமைக்ரான் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 3 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியா விமான நிலையங்களில், சர்வதேச பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில் மத்திய அரசு தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. அதேபோல் மாநில அரசும் வெளிநாட்டு பயணிகளை கட்டாயம் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா பரவல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் சர்வதேச விமான நிலையங்களில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில், பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் மக்களை பாதுகாக்க அரசு தயார் நிலையில் உள்ளது என மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டபோது, நாள்தோறும் 4000 பேருக்கு RT-PCR பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் அதில் பாதிப்பு எண்ணிக்கை வெறும் ஒற்றை இலக்கத்தில் 6 அல்லது 7 என உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாட்டில் இதுவரை பி.எஃப்.7 வகை கொரோனா பரவவில்லை. பொதுமக்கள் பதற்றப்பட வேண்டிய நிலை இல்லை என்றாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். தமிழ்நாட்டில் ஒரே பகுதியில் 3 பேருக்கு மேல் கொரோனா அறிகுறிகள் இருந்தால், அங்கு வசிக்கும் அனைவருக்கும் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

First published:

Tags: Corona, CoronaVirus, Covid-19, Ma subramanian