ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Corona 4th Wave | வரும் ஜூனில் கொரோனா 4வது அலை - நாடாளுமன்றத்தில் எம்.பி ரவிக்குமார் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ்

Corona 4th Wave | வரும் ஜூனில் கொரோனா 4வது அலை - நாடாளுமன்றத்தில் எம்.பி ரவிக்குமார் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ்

ரவிக்குமார் எம்.பி

ரவிக்குமார் எம்.பி

Corona 4th Wave | இந்தியாவில் ஜூன் மாதத்தில் கொரோனா நான்காம் அலை எழக்கூடும் என கான்பூர் ஐஐடி நடத்திய ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கொரோனா நான்காவது அலை தொடர்பாக நாடாளுமன்றத்தில், விசிக  எம்.பி ரவிக்குமார் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.

  இந்தியாவில் ஜூன் மாதத்தில் கொரோனா நான்காம் அலை எழக்கூடும் என கான்பூர் ஐஐடி நடத்திய ஆய்வில் கணிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நான்கு மாதங்கள் வரை நீடிக்கும் என்று கூறியதாகவும் தெரிகிறது. நான்காம் அலையின் தீவிரம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. அக்டோபர் மாதத்தில் தீவிரம் குறையும் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

  இந்த நிலையில் கொரோனா நான்காவது அலை தொடர்பாக நாடாளுமன்றத்தில் எம்.பி ரவிக்குமார் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ஜூன் 22 -ல் கொரோனா நான்காவது அலை தாக்கத் தொடங்கும் என கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ள நிலையில் அதை எதிர்கொள்வதற்கு ஒன்றிய அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? எனக் கேட்டு இன்று கவன ஈர்ப்புத் தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Corona, Corona impact, Covid-19, Parliament, Villupuram MP Ravikumar