• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தடுப்பூசி விவகாரத்தில் குஷ்பு, எடப்பாடி பழனிசாமி ஆதாரமற்ற குற்றச்சாட்டு வைக்கிறார்கள் - புள்ளிவிவரங்களை அடுக்கிய அமைச்சர் மா.சுப்ரமணியன்

தடுப்பூசி விவகாரத்தில் குஷ்பு, எடப்பாடி பழனிசாமி ஆதாரமற்ற குற்றச்சாட்டு வைக்கிறார்கள் - புள்ளிவிவரங்களை அடுக்கிய அமைச்சர் மா.சுப்ரமணியன்

மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

நேற்று முன்தினம் 3 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்த நிலையில் 30 லட்சம் தடுப்பூசிகள் வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் பொய் பிரச்சாரம் செய்கிறார்.

  • Share this:
தமிழக அரசு ஜூன் மாதம்  5லட்சம் தடுப்பூசியை வீணடித்துவிட்டதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டினார்.

சென்னை கிண்டி தடுப்பூசி முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கலந்துக்கொண்டார். அப்போது பேசியவர்,  “அ.தி.மு.க அரசில் தினசரி 61,441  தடுப்பூசி செலுத்தபட்டது.  தற்போது தி.மு.க ஆட்சியில் 1,61,297 தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. அ.தி.மு.க ஆட்சியில் 4 லட்சம் டோஸ்கள் வீணடிப்பு. தற்போது தமிழக அரசு 3,02,704 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. திமுக ஆட்சியில் வாங்கப்பட்ட தடுப்பூசிகளை காட்டிலும் கூடுதல் டோஸ் தடுப்பு ஊசிகள் செலுத்தபட்டுள்ளது.

தடுப்பூசி வீணடிப்பு திமுக ஆட்சியில் குறைக்கபட்டுள்ளது. தமிழகத்தில் பற்றாக்குறையை நீக்கி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் உருமாறிய கொரனோ வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம். உருமாறிய அனைத்து கொரோனா வகைகளையும் எதிர்கொள்ள தடுப்பூசியே முக்கியம்.எனவே தடுப்பூசி செலுத்துவது அவசியம்.
வாங்கிய தடுப்பூசிகளை கூட  முழுவதுமாக போடாத ஒரு அரசாக கடந்த கால அ.தி.மு.க அரசு இருந்தது.இப்போது தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிமுக ஆட்சியில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 61 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டது. 103 நாட்களில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் அ.தி.மு.க ஆட்சியில் வீணடிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 3 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்த நிலையில் 30 லட்சம் தடுப்பூசிகள் வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் பொய் பிரச்சாரம் செய்கிறார்
அரசியல் செய்யாமல் அரவணைத்து செல்லவே தற்போதைய அரசு செயல்படுகிறது.

தமிழக அரசு ஜூன் மாதம்  5லட்சம் தடுப்பூசியை வீணடித்துவிட்டதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்து வருகிறார்.குஷ்புவாக இருந்தாலும் சரி எடப்பாடி பழனிசாமியாக இருந்தாலும் சரி ஆதாரமற்ற குற்றசாட்டை  வெளிப்படுத்தும் விதமாக வெள்ளை அறிக்கை வெளியிட தயார்” எனக் கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெள்ளை அறிக்கை கோரியிருந்த நிலையில் அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.

 



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: