Home /News /tamil-nadu /

தமிழகத்தில் இன்று 10-வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் இன்று 10-வது மெகா தடுப்பூசி முகாம்

கொரோனா தடுப்பூசி முகாம்

கொரோனா தடுப்பூசி முகாம்

10-வது தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இன்று நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழகத்தில் 10-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் விதமாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், வழக்கத்தைவிட கூடுதல் எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள, மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், வாரந்தோறும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    அதன்படி, 10-வது தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இன்று நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் ஆயிரத்து 600 முகாம்கள் நடைபெறுகின்றன. முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போடுவதற்கான காலக்கெடு முடிந்த 71 லட்சம் பேரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Corona, Corona Symptoms, Corona Vaccine, Covaxin, Covishield

    அடுத்த செய்தி