முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சென்னையில் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்..! - தடுப்பூசி போடாதவர்கள் பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தல்!

சென்னையில் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்..! - தடுப்பூசி போடாதவர்கள் பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தல்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சென்னையில் நாளை 35வது தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தடுப்பூசி போடாதவர்கள் முகாமை பயன்படுத்தி கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்ள தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னையில் நாளை 35வது கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி, தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது ஒரு பேரியக்கமாக நடத்தப்பட்டுள்ளது என்றும், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் 34 மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி முதல் தொடங்கிய இந்த கொரோனா தடுப்பூசி முகாம் தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை சென்னையில் நடைபெற்ற 34 தடுப்பூசி முகாம்களில், 41,90,373 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாளை சென்னையில் 35வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமிற்காக ஒரு வார்டிற்கு 10 முகாம்கள் என மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசியினை 2 தவணைகள் செலுத்திகொண்டு 6 மாதங்கள் அல்லது 26 வாரங்கள் கடந்த 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடைவர்களாக கருதப்படுகிறது. இவர்களுக்கு கார்பெவேக்ஸ் தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியாக செலுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் மட்டும் 42,70,342 நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடைய நபர்களாக உள்ளனர். இவர்களில் 5,54,588 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி வரும் 30ஆம் தேதி வரை மட்டுமே 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது இலவசமாக செலுத்தப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தகுதியுடைய அனைவரும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது

First published:

Tags: Chennai, Corona Vaccine, Covid-19 vaccine, Tamilnadu, Vaccine