மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே மது விற்பனை - டாஸ்மாக் புதிய கட்டுப்பாடுகள்

டாஸ்மாக்

இரண்டு வாடிக்கையாளர்களிடையே குறைந்தது 6 அடி சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும்

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 20-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஞாயிற்றுகிழமைகளில் முழுஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கொரோனா இரவு நேர ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இயங்கும் அரசு மதுபானக்கடைகள் வழக்கமாக பகல் 12 மணிமுதல் இரவு 10 வரை திறக்கப்பட்டிருக்கும். தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசு மதுபானக்கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 9 வரை மட்டுமே செயல்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  டாஸ்மாக் கடைப்பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

  மதுபான சில்லறை விற்பனை கடைகளில் எந்தவொரு கூட்ட நெரிசலும் இருக்கக்கூடாது

  இரண்டு வாடிக்கையாளர்களிடையே குறைந்தது 6 அடி சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும்

  ஒரே நேரத்தில் கடையின் உள்ளே 5 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது

  அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளிலும் மேற்பார்வையாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்

  கடைப்பணியாளர்கள் மூன்றடுக்கு முககவசம், கையுறைகள், மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கிருமிநாசினி திரவத்தை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்

  ஒரு நாளைக்கு இரண்டு முறை கிருமிநாசினி திரவத்தை கொண்டு கடை சுத்தம் செய்ய வேண்டும்

  குறைந்தது இரண்டு பணியாளர்கள் கடையின் வெளிப்புறம் நின்று மதுபிரியர்களை சமூக இடைவெளியை பின்பற்றி வரசெய்தும், முகக்கவசம் அனிந்து வர செய்தும் விற்பனை பணியை மேற்கொள்ள வேண்டும்.

  முகக்கவசம் அணிந்து வரும் மதுப்பிரியர்களுக்கு மட்டும் மதுவகைகளை விற்பனை செய்ய வேண்டும்.எக்காரணம் கொண்டும் மதுபானங்களை மொத்த விற்பனை செய்தல் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Ramprasath H
  First published: