திருச்சியில் வார்டு வாரியாக காய்ச்சல் முகாம்கள் : மீண்டும் திறக்கப்படும் சிறப்பு சிகிச்சை மையங்கள்

திருச்சியில் வார்டு வாரியாக காய்ச்சல் முகாம்கள் : மீண்டும் திறக்கப்படும் சிறப்பு சிகிச்சை மையங்கள்

கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள்

திருச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் வரை ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா தொற்று, தற்போது மூன்று இலக்கத்தில் தொடர்கிறது. நேற்றைய தினம் மட்டும்  131 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  • Share this:
திருச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் வரை ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா தொற்று, தற்போது மூன்று இலக்கத்தில் தொடர்கிறது. நேற்றைய தினம் மட்டும்  131 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வீசத்தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  திருச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் வரை ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா தொற்று, தற்போது மூன்று இலக்கத்தில் தொடர்கிறது. இந்நிலையில், தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதையடுத்து, கொரோனா சிகிச்சை சிறப்பு மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதன்படி, திருச்சி அரசு மருத்துவமனையில் 450 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த ஆண்டைப் போலவே, பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் 200 படுக்கை வசதியுடன் சிறப்பு மையமும் சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 600 படுக்கை வசதிகளுடன் சிறப்பு மையம் தயார் நிலையில் உள்ளன. இவை தவிர தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 600 படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் முன் கூட்டியே கண்டறியும் வகையில், வார்டு வாரியாக காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. திருச்சி மாநகராட்சி, மாவட்டத்தில் தினமும் 4, 500 பேருக்கு பரிசோதனையும் 600க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்படுகின்றன.குறிப்பாக, திருச்சி மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் திருச்சி அரசு பொது மருத்துவமனை தடுப்பூசி மையத்தில், ரயில்வே எஸ்.பி செந்தில்குமார், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள துணை ராணுவப் படையினர் உள்ளிட்ட பலர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
Published by:Ramprasath H
First published: