பேருந்தில் 50 சதவிகிதம் மட்டுமே அனுமதி.. ஒரு மணிநேரம் காத்திருப்பு... முழு லாக்டெளன்னே போடுங்க கரூர் மக்கள் வேதனை

பேருந்தில் 50 சதவிகிதம் மட்டுமே அனுமதி.. ஒரு மணிநேரம் காத்திருப்பு... முழு லாக்டெளன்னே போடுங்க கரூர் மக்கள் வேதனை

சாலை மறியல்

திருச்சியிலிருந்து கரூர் நோக்கி வந்த எந்த தனியார் மற்றும் அரசு பேருந்துகள் நிற்காமல் சென்றதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

 • Share this:
  கொரோனா கட்டுப்பாட்டால் பேருந்துகள் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் பயணிகள் அவதி. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பயனிகள் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

  கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து கிருஷ்ணராயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பிச்சம்பட்டி, கோவக்குளம், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம், திருக்காம்புலியூர் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து தொழிலாளர்கள் பொதுமக்கள் என பலர் கரூர் மற்றும் திருச்சிக்கு பேருந்துகளில் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். தினசரி சுமார் 2000 நபர்கள் கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து கரூருக்கு கொசுவலை தயாரித்தல், ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் பேருந்து கூண்டு கட்டும் நிறுவனம் மற்றும் கட்டுமான பணிகளுக்காக செல்கின்றனர்.

  தற்போது கொரோனா பரவல் காரணமாக 50 சதவீத பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என்று தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதல் பேருந்து நிறுத்தத்தில் பயனிகள் அதிக அளவு கூடி நின்றனர். ஆனால் திருச்சியிலிருந்து கரூர் நோக்கி வந்த எந்த தனியார் மற்றும் அரசு பேருந்துகள் நிற்காமல் சென்றதால் பயணிகள் அவதி அடைந்தனர். இதனால் சுமார் 100க்கும் மேற்பட்ட பயணிகள் திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  மாயனூர் போலீஸார் பயணிகளை கலைந்து செல்ல கேட்டுக்கொண்டனர். ஆனால் பயணிகள் எங்களுக்கு இன்று வேலைக்கு செல்ல முடியாததால் ஒரு நாள் சம்பளம் இழப்பு ஏற்படுகிறது. கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் அல்லது முழுவதும் லாக் டவுன் செய்ய வேண்டும்.இதனால் எங்களது வருவாய் பாதிக்கிறது என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போக்குவரத்து துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.

  செய்தியாளர்:  தி.கார்த்திகேயன்,
  Published by:Ramprasath H
  First published: