நெய்வேலி அருகே பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த கணவன் - மனைவிக்கு கொரோனோ தொற்று உறுதி என தொலைபேசி வந்ததால் பேருந்தில் பயணித்த பயணிகள், நடத்துனர், ஓட்டுனர் என அனைவரும் பேருந்தை சாலையோரத்தில் விட்டு இறங்கி சென்றததால் பரபரப்பான சூழல் நிலவியது,
கடலூர் மாவட்டம் ஆபத்தானபுரத்தைச் சேர்ந்த கணவன், மனைவி இருவருக்கும் கொரோனா தொற்று இருந்ததால் பரிசோதனை செய்தனர். பின்னர் வீட்டிறக்கு திரும்பிய அவர்கள் இன்று காலை பண்ருட்டி அருகே காடாம்புலியூருக்கு பகுதிக்கு பேருந்தில் பயணம் செய்தனர்.
அப்போது சுகாதார ஊழியர்கள் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை மொபைலில் அழைப்பு விடுத்து தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்சசி அடைந்த அவர்கள் தொலைபேசியினை நடத்துனரிடம் கொடுத்துள்ளனர். சுகாதாரத்துறை ஊழியர்கள் அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி தகவலை தெரிவித்துள்ளார். எனவே அவர்களை பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடுங்கள் என்று கூறியுள்ளனர் .
இதையடுத்து அதிர்சசி அடைந்த ஓட்டுநர் பேருந்தை நெய்வேலி இந்திரா நகர் பகுதியல் அவர்களை கீழே இறக்கிவிட்டனர்.பேருந்தில் இருந்த சக பயணிகள், ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அனைவரும் சாலையோரத்தில் பேருந்தை நிறுத்தி விட்டு சென்று விட்டனர். அதன்பிறகு பேருந்தை பணிமனைக்கு எடுத்துச் சென்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus