கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சகாயம் ஐஏஎஸ்-க்கு தீவிர சிகிச்சை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சகாயம் ஐஏஎஸ்-க்கு தீவிர சிகிச்சை

சகாயம் ஐஏஎஸ்

சகாயம் அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது

 • Share this:
  முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சகாயம்,  விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் சகாயம் அரசியல் பேரவை என்ற அமைப்பை தொடங்கி அரசியலில் களமிறங்கினார். இந்த அமைப்பு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 20 தொகுதிகளில் போட்டியிட்டது. சகாயம் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை. வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

  தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்கள், வேட்பாளர்கள் சிலர் கொரோனோ நோய்த்தோற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  கடந்த சில தினங்களுக்கு முன்பு சகாயம் அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. கொரோனா அறிகுறிகள் காணப்பட்டதையடுத்து அவர் சென்னையிலுள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 8-வது நாளாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடலில் ரத்த அழுத்தம் குறைந்து கொண்டே வருகின்றது. மருத்துவர்கள் தனிக்குழு அமைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
  Published by:Ramprasath H
  First published: