Home /News /tamil-nadu /

தமிழகத்தில் மீண்டும் 2000ஐ நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் மீண்டும் 2000ஐ நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்பு!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,997 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2வது அலை பரவத் தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், மே மாதத்தில் இது உச்சமடைந்தது. அதனைத்தொடர்ந்து, படிப்படியாக பாதிப்பு வெகுவாக குறைந்து கட்டுக்குள் வந்தது.

    இந்நிலையில், கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அந்தவகையில், இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,58,149 மாதிரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 1,997 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 25,69,398 ஆக உயர்ந்துள்ளது.

    Also read: கொரோனா நெகடிவ் சான்றிதழ் இன்று முதல் கட்டாயம்... தமிழக எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு

    கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 1,943 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் 25,15,030 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    20,138 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதித்து இன்று மட்டும் 33 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 34,230 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று கோயம்புத்தூரில் 220 பேருக்கும், சென்னையில் 196 பேருக்கும் , ஈரோட்டில் 161 பேருக்கும்,கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, CoronaVirus, COVID-19 Second Wave

    அடுத்த செய்தி