ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

விறைப்பு செயலிழப்பை உருவாக்கும் கோவிட் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

விறைப்பு செயலிழப்பை உருவாக்கும் கோவிட் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

ஆய்வில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு இனப்பெருக்க அமைப்பு தொடர்பான பிரச்சனைகள் உருவாகும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஆய்வில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு இனப்பெருக்க அமைப்பு தொடர்பான பிரச்சனைகள் உருவாகும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஆய்வில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு இனப்பெருக்க அமைப்பு தொடர்பான பிரச்சனைகள் உருவாகும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

  • 2 minute read
  • Last Updated :

கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு விறைப்பு செயலிழப்பு ஏற்படுவது ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம், பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு வகையிலான பக்கவிளைவுகளை ஏற்படுத்தி துன்புறுத்தி வருகிறது. கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டாலும், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் வாழ்நாள் பிரச்சனையாக மாறுவது பெரும் தலைவலியாக உள்ளது. இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு செக்ஸூவல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பில்லை என கூறப்பட்டு வந்தது.

ஆனால், அதனை மறுக்கும் விதமாக அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், கோவிட் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு விறைப்புத்தன்மை செயலிழப்பு ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு இனப்பெருக்க அமைப்பு தொடர்பான பிரச்சனைகள் உருவாகும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இருவரின் விந்தணு மாதிரியை எடுத்து பரிசோதனைக்குட்படுத்தியபோது, கோவிட் தொற்றுகள் விந்தணுக்களில் இருப்பதை பார்த்து ஆய்வாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

முதல் கட்டமாக, கொரோனா தொற்றுக்குள்ளாகி இறந்த ஆறு ஆண்களின் விதைத் திசுக்களை ஆய்வாளர்கள் சேகரித்து ஆய்வு செய்தனர். அப்போது, ஒரு ஆணின் விந்துணுக்களில் கோவிட் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற 3 பேருக்கும் கோவிட் தொற்றுக்குப்பிறகு விந்தணுக்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்துள்ளது. தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்த ஒருவரின் விந்தணுவிலும் கொரோனா தொற்று இருந்துள்ளது. இதற்கடுத்தப்படியாக, இரண்டு கொரோனா நோயாளிகளிடம் இருந்து ஆண்குறி உள்வைப்பு திசுக்களை எடுத்து சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

சுமார் 9 மாதங்கள் வரை அந்த நபரின் திசுக்கள் பகுப்பாய்வு செய்து வைக்கப்பட்டிருந்தபோதும், அப்போதும் கொரோனா தொற்று தொடர்ந்து இருந்துள்ளது. இது ஆய்வாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. இந்த சோதனையின் போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் முழுமையாக விறைப்பு செயலிழப்பை சந்தித்ததையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது குறித்து பேசிய மியாமி பல்கலைக்கழகத்தின் சிறுநீரக இணைப் பேராசிரியர் ரஞ்சித் ராமசாமி, இந்த ஆய்வு கொரோனா தொற்று ஆணின் இனப்பெருக்கத்தை எப்படி பாதிக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கான முதல் படி எனத் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின் முடிவுகள் ஒன்றும் ஆச்சரியமளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், வைரஸ்கள் விந்தணுக்களின் உற்பத்தியை ஆக்கிரமித்து, அவற்றின் உற்பத்தி மற்றும் கருவுறுதலை பாதிக்கும் என்பதை விஞ்ஞானிகளுக்குத் தெரியும் என்றும் கூறியுள்ளார்.

உங்கள் பார்ட்னரின் குறட்டையால் தூக்கம் கெடுகிறதா? சிக்கலை சரி செய்ய எளிய வழி...

விந்தணு உற்பத்தியை பாதிப்பதில் சளி மற்றும் ஜிகா வைரஸ்களின் பங்கும் இருக்கிறது என ரஞ்சித் ராமசாமி கூறியுள்ளார். வங்காளத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், முதல் வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் நுரையீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புகளை எதிர்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதேநேரத்தில், வைரஸ்கள் ஆண் இனப்பெருக்கத்தை பாதித்தாலும், தடுப்பூசிகள் பாதுகாப்பு கொடுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

First published: