13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு... ஜூன் முதல் ரேஷன் கடைகளில் விநியோகம் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும்

 • Share this:
  தமிழகத்தின் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு மே மாதம் 24-ம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கை ஒரு வார காலத்துக்கு அமல்படுத்தியது. இந்த ஊரடங்கு வரும் 31-05-21 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வருகிறது.

  இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கை மேலும் ஒருவார காலத்துக்கு அதாவது 7-6-21 காலை 6 மணி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்

  • அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி/ பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும்.

  • மளிகைப் பொருட்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்யவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

  • இதுதவிர 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் வரும் ஜூன் மாதம் முதல் வழங்கிட, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.


  தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: