• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • ‘கொரோனா வைரஸ்க்கு டெல்டா பெயரா.. உலக சுகாதார நிறுவனத்தின் முடிவை எதிர்ப்பது ஏன்?’ -ம.நீ.ம மாநில செயலாளர் விளக்கம்

‘கொரோனா வைரஸ்க்கு டெல்டா பெயரா.. உலக சுகாதார நிறுவனத்தின் முடிவை எதிர்ப்பது ஏன்?’ -ம.நீ.ம மாநில செயலாளர் விளக்கம்

கமல்ஹாசன், பொன்னுசாமி

கமல்ஹாசன், பொன்னுசாமி

"டெல்டா" என்கிற பெயரை கேட்கும் பாமர மக்கள் மட்டுமின்றி நம்மில் அனைவருக்கும் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களையே நினைவூட்டும்.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளே இந்த கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் கடந்த மாதம் 12ம் தேதி கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரசுக்கு இந்திய தொற்று B.1.617என்று அழைக்கப்பட்டு வந்தது. ஆனால், உருமாறுபாடு அடைந்த வைரஸ்களை நாடுகளின் பெயரால் அழைக்க கூடாது என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி இருக்கிறது.

  உருமாறிய கொரொனாவுக்கு கிரேக்க எழுத்துக்களின் பெயரை பயன்படுத்தாலம் என்றும் விஞ்ஞானிகள் குழு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் உருவாறிய கொரோனா வைரஸ்-க்கு உலக சுகாதார நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்டா எனப் பெயர் சூட்டியது. இதனைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம்" தொழிலாளர் நல அணி சார்பில் கண்டித்து ஒரு அறிக்கை வெளியானது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த அறிக்கை தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின்  மாநில செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி மீது சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதற்கு தற்போது அவர் அறிக்கையின் வாயிலாக பதிலளித்துள்ளார். “உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் உயிர்க்கொல்லி நோயான உருமாறிய கொரோனா வைரஸ்க்கு உலக சுகாதார நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன் "டெல்டா" என பெயர் சூட்டியிருந்ததை "மக்கள் நீதி மய்யம்" தொழிலாளர் நல அணி சார்பில் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தேன்.

  அந்த அறிக்கையை படித்த நட்புகள், மெத்தப் படித்தவர்கள், சமூக வலைதளவாசிகள் என பலரும் கிரேக்க எழுத்தின் அகரவரிசைப்படியே "WHO" உருமாறிய கொரோனா வைரஸ்க்கு "DELTA" என பெயர் சூட்டியதாகவும் இது கூட தெரியாதவர் மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளரா..? எனவும் விமர்சனக் கணைகளை அள்ளி வீசி வருகின்றனர். அவ்வாறு எதையும் அலசி ஆராயாமல் கண்ணை மூடிக்கொண்டு எதிர்வினையாற்றுவோருக்கு விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம் என நினைக்கிறேன்.

  Also Read: ஆக்சிஜன், தடுப்பூசிகளை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய 45 நிறுவனங்கள் விருப்பம்

  தமிழகத்தில் படித்தவர்கள் தொடங்கி படிக்காத பாமர மக்கள் வரை "தானே", "வர்தா", "கஜா", "ஒக்கி" என்கிற பெயர்களை சொன்னதும் அது தமிழகத்தின் இயற்கை வளங்களையும், விவசாயிகள், ஏழை, பணக்காரர் என்கிற பாகுபாடின்றி மக்களின் வாழ்வாதாரத்தையும், இயல்பு வாழ்க்கையும் முற்றிலுமாக புரட்டி போட்ட "புயல்" என்பதை எளிதில் சொல்லி விடக் கூடிய வகையில் நினைவிற்கு நிற்கும் பெயர்களாகும்.

  அது போலவே பத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் மட்டுமின்றி பொதுவில் பயன்படுத்தப்படும் "டெல்டா" என்கிற பெயர் கிரேக்க எண்களில் ஒன்றாக இருந்தாலும், பெரும்பாலும் "டெல்டா" என்றால் ஆற்றுப்படுகை அல்லது விவசாயத்துக்கு ஏற்ற சமதள வளமான விளை நிலப்பகுதியாகவே பார்க்கப்பட்டு வருகிறது என்பது தான் உண்மை. அதுமட்டுமின்றி "டெல்டா" என்கிற பெயரை கேட்கும் பாமர மக்கள் மட்டுமின்றி நம்மில் அனைவருக்கும் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களையே நினைவூட்டும்.

  Also Read: Black fungus : கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் கருப்பு பூஞ்சையின் இந்த அறிகுறிகள் இருக்க என செக் பண்ணுங்க..!

  அப்படி டெல்டா என்கிற பெயரை பாரம்பரியமிக்க விவசாயத்தோடு ஒன்றியதாக கருதப்பட்டு வரும் சூழலில் தீய நுண்கிருமிக்கு அந்த பெயரை சூட்டும் போது மக்கள் மத்தியில் வெறுப்புணர்ச்சியும், அச்சமுமே தோன்றும் என்பதாலேயே WHO முடிவிற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டேன்.

  ஏற்கனவே "கோவிட்-19" என்கிற பெயரை விட "கொரோனா" என்கிற பெயரை காதில் கேட்கும் மக்கள் அஞ்சி ஓடும் நிலையே தற்போது தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ளது. அந்நோய் தொற்று காரணமாக உறவுகளுக்குள்ளும், நட்புகளுக்கும் மனிதநேயம் மரித்துப் போன நிகழ்வுகளை நாம் தொடர்ந்து கண் கூடாக கண்டு வருகிறோம். அது போலவே நாளை "டெல்டா" என்கிற பெயரை கேட்கும் போது ஆற்றுப்படுகை அல்லது விவசாயத்துக்கு ஏற்ற சமதள வளமான விளை நிலப்பகுதி என்பது மறந்து தீநுண்கிருமி என்பதாக கருதி மக்கள் அஞ்சி ஓடும் நிலையே ஏற்படும். எனவே தான் உருமாறிய கொரோனா வைரஸ்க்கு டெல்டா என பெயர் சூட்டியதை வன்மையாகக் கண்டித்திருந்தேன். கிரேக்க எழுத்தின் "D" வரிசைப்படியே அந்த பெயர் சூட்டப்பட்டிருந்தாலும் கூட கொடிய உயிர்க்கொல்லி நோய்க்கு "D" அகர வரிசையில் வேறு பெயரை மாற்றி சூட்டுவதே சரியானதாக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ramprasath H
  First published: