தமிழகத்தில் இன்று 786 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு.. 4 பேர் உயிரிழப்பு

Covid 19 Updates

தமிழகத்தில் இன்று 786 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு.. 4 பேர் உயிரிழப்பு
(கோப்புப் படம்)
  • Share this:
தமிழகத்தில் இன்று 786 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இன்று மட்டு 12,653 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,753 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று கொரோனாவிலிருந்து 846 பேரும், 4 பேர் உயிரிழந்தும் உள்ளனர். தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 98 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று அதிகபட்சமாக 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை அடுத்து செங்கல்பட்டில் 40 பேரும், திருவள்ளூரில் 39 பேரும், காஞ்சிபுரத்தில் 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading