அடுத்தடுத்து 3 கோயில்கள் முன்பு டயர்கள் தீவைத்து எரிப்பு: கோவையில் பதற்றம்..

அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் அருகே உள்ள கடையில் இருந்து பழைய டயர்களை எடுத்துவந்து கோயில் முன்பாக தீ வைத்துள்ளார்.

அடுத்தடுத்து 3 கோயில்கள் முன்பு டயர்கள் தீவைத்து எரிப்பு: கோவையில் பதற்றம்..
  • Share this:
கோவையில் அடுத்தடுத்து மூன்று கோயில்கள் முன்பாக பழைய டயர்கள் போட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

கோவை டவுன் ஹாலில் என்.எச் சாலையில் உள்ள மகாளியம்மன் கோயிலில் சூலாயுதம் உள்ளிட்ட பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, அங்கு வந்த போலீசார் கோயில் முன்பாக உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் அருகே உள்ள கடையில் இருந்து பழைய டயர்களை எடுத்துவந்து கோயில் முன்பாக தீ வைத்து எரித்தது தெரியவந்தது. மேலும், சூலாயுதம் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.


இதேபோன்று ரயில் நிலையம் முன் உள்ள விநாயகர் கோயில் மற்றும் துடியலூர் அருகே உள்ள நல்லாம்பாளையத்தில் செல்வ விநாயகர் கோயில்களின் முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் டயர்களை போட்டு தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விஷமிகளை தேடி வருகின்றனர். இதற்கிடையே, மாகாளியம்மன் கோயில் முன்பு இந்து அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கூடியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

 
First published: July 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading