வாசன் என்னை கைவிட்டுவிட்டார்: தமாகாவில் சேர்ந்ததற்காக வருத்தப்படுகிறேன் - துணைத்தலைவர் கோவை தங்கம் ஆவேசம்

வாசன் என்னை கைவிட்டுவிட்டார்: தமாகாவில் சேர்ந்ததற்காக வருத்தப்படுகிறேன் - துணைத்தலைவர் கோவை தங்கம் ஆவேசம்

கோவை தங்கம்

தமிழ் மாநில காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் துணைத் தலைவர் கோவை தங்கம் அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

  • Share this:
கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள தனியார் அரங்கில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் கோவை தங்கம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘எனது 30 வயதில் வால்பாறை தொகுதியில் போட்டியிட இந்திராகாந்தி வாய்ப்பு தந்தார். 1998-ம் ஆண்டு தேர்தலில் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மூப்பனார் வாய்ப்பு தந்தார். வால்பாறை மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தியுள்ளேன். தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு பெற்று தந்துள்ளேன்.

எனக்கு பிறகு ஊதிய உயர்வு, பஞ்சப்படி ஆகியவற்றை யாரும் பெற்றுத்தரவில்லை. அதனால் தான் வால்பாறை மக்கள் என்னை நேசிக்கின்றனர். வால்பாறை தொகுதியில் கல்லூரி, அடிப்படை வசதிகள் செய்து தந்துள்ளேன். கடந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் சேர என்னை போன்றவர்களுக்கு உடன்பாடு இருக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் ஒரு சீட் பெற எதிர்ப்பு தெரிவித்தேன். சுயேட்சை சின்னம் வேண்டாம். இரட்டை இலையில் நிற்குமாறு அமைச்சர் வேலுமணி சொன்னார். இரட்டை இலை சின்னத்தில் நிற்பதில் எனக்கு விருப்பம் இல்லை. திரு.வி.க நகர், தாராபுரத்தில் போட்டியிடுமாறு வேலுமணி சொன்னார். அதனை ஒத்துக் கொள்ளவில்லை. நின்றால் வால்பாறை தொகுதியில் நிற்பேன். வேறு தொகுதியில் நிற்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. 6 தொகுதியை வாங்க வேண்டாம். சுயேட்சையாக போட்டியிடலாம் என ஜி.கே.வாசனிடம் சொன்னேன்.

சைக்கிள் சின்னத்தில் நிற்கலாம் என சொன்னதை ஜி.கே.வாசன் ஏற்கவில்லை. சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தோற்றுவிடும்.
வால்பாறை தொகுதியை எனக்கு தர வேண்டுமென அமைச்சர் வேலுமணியிடம் வைத்தியலிங்கம் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
திரு.வி.க நகரில் போட்டியிட மாட்டேன் என தெரிவித்து விட்டேன். துரோகம், சதி நடந்துள்ளது. ஜி.கே.வாசன் என்னை கை விட்டுவிட்டார். காசு கொடுத்து வெற்றி பெற மாட்டேன். காமராசர் ஆட்சி வர வேண்டும் என்பதற்காக தான் த.மா.கவில் இருந்தேன்.
தமிழ் மாநில காங்கிரஸ் பெயரை நான் தான் வாங்கி தந்தேன். காங்கிரசில் இருந்து விலகி தமிழ் மாநில காங்கிரசில் சேர்ந்ததற்காக வருத்தப்படுகிறேன்.

எல்லா பதவிகளையும் ராஜினாமா செய்கிறேன். ஓட்டுக்கு பணம் கொடுத்தால், நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். தமாக நிர்வாகிகள் பலர் ராஜினாமா செய்கின்றனர். தி.மு.கவில் சேரும் எண்ணம் இப்போது எனக்கு இல்லை. தனிக்கட்சி ஆரம்பிக்க எனக்கு தகுதியில்லை. வால்பாறை தொகுதி எனக்கு ஒதுக்காததற்கு ஒரே காரணம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தான். சுயேட்சையாக போட்டியிட நான் விரும்பவில்லை. நாளை என் நிலைப்பாடு மாறலாம்’ என்று தெரிவித்தார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: