அதிமுகவில் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் அதிகார மோதல் ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் ஒ.பன்னீர்செல்வத்தின் அதிதீவிர ஆதரவாளராக திகழ்ந்த கோவை செல்வராஜ் அவரது அணியில் இருந்து விலகியுள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி பூசல் கடந்த சில மாதங்களாக பூதாகரமாக வெடித்துள்ளது. இபிஎஸ் -ஓபிஎஸ் தரப்பு மாறி மாறி கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கோவை செல்வராஜ், உள்ளிட்டோர் தீவிர ஆதரவாளராக அறியப்படுகின்றனர்.
குறிப்பாக கோவை செல்வராஜ் ஓபிஎஸ் அணியில் இருந்து கொண்டு இபிஎஸ் அணியை கடும் வார்த்தைகளால் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில் ஓபிஎஸ் அணியில் இருந்தும் அதிமுகவில் இருந்தே விலகுவதாக கோவை செல்வராஜ் பேசும் ஆடியோ வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து ஆடியோவில் பேசியுள்ள கோவை செல்வராஜ், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை வெளியான பின் ஓபிஎஸ்- பதவிக்காக ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்பது தெரியவந்தது. ஜெயலலிதாவுக்கு அப்போல்லோவில் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்து சென்று உயிரோடு கொண்டுவரவில்லை. சுயநலவாதிகளுடன் சேர்த்து பணியாற்ற எனது மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. ஜெயலலிதாவின் உயிரைவிட பதவி முக்கியம் என செயல்பட்டுள்ளனர். இபிஎஸ்- ஓபிஎஸ் என இருவரின் தலைமையில் செயல்பட தமக்கு விரும்பவில்லை என்றும் ஜெயலலிதாவுக்காக இந்த இயக்கத்தில் பணியாற்றினேன், செயல்பட்டேன் என பேசினார்.
மேலும் சுயநலத்திற்காக சண்டை போடுவதால் அதிமுக என்ற பெயரில் சுயநலத்துக்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை. கட்சியை அழிக்கும் செயலில் நான் ஈடுபடக்கூடாது என விலகுகிறேன் எனவும் அரசியலில் இருந்து தாம் விலகவில்லை என குறிப்பிட்டுள்ளார். திராவிட பாரம்பரியத்தில் வந்த நான் அதில் தான் இருப்பேன் என்றும் தற்போது நான் ஓபிஎஸ் அணியில் இருந்தும் அதிமுகவில் இருந்தும் விலகுவதாக அந்த ஆடியோவில் கோவை செல்வராஜ் பேசியுள்ளார். இந்த ஆடியோ வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, EPS, OPS, WhatsApp Audio