அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து அவதூறு பேசியதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது கோவை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவையில் தொண்டாமுத்தூர், குனியமுத்தூர் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலின், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது பல்வேறு குற்றசாட்டுகளை கூறினார்.
ஊழலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையே மிஞ்சியவர் எஸ்.பி.வேலுமணி என்றும், பாலியல் வழக்கில் பார் நாகராஜூக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதுதொடர்பாக தொண்டாமுத்தூர், குனியமுத்தூர் காவல் நிலையங்களில் அதிமுக-வினர் தரப்பினர் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, இரு பிரிவுகள் இடையே மோதலை ஏற்படுத்த முயலுதல், மக்கள் பிரதிநிதிகளை அவதூறாக பேசுதல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Also Watch
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.