கோவையில் 3-வது திருமணத்திற்கு முயன்ற கணவன்! நடு ரோட்டில் வைத்து தர்மஅடி கொடுத்த மனைவிகள்

Web Desk | news18-tamil
Updated: September 10, 2019, 9:47 PM IST
கோவையில் 3-வது திருமணத்திற்கு முயன்ற கணவன்! நடு ரோட்டில் வைத்து தர்மஅடி கொடுத்த மனைவிகள்
Web Desk | news18-tamil
Updated: September 10, 2019, 9:47 PM IST
கோவை மாவட்டம் சூலூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் மூன்றாவது திருமணம் செய்ய முயன்றதாக அவரது மனைவிகள் தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கோவை, நேரு நகரை சேர்ந்தவர் அரவிந்த தினேஷ். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அரவிந்த தினேஷ் 2016-ல் திருப்பூர் கணபதி பாளையத்தை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவரைத் திருமணம் செய்துள்ளார். திருமணமான 15 நாளில் பிரியதர்ஷினியை அடித்து விரட்டியததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, திருமண வலைதளங்கள் மூலம் கரூரைச் சேர்ந்த அனுப்பிரியா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.


இந்த நிலையில், இரண்டாவது மனைவியும் அடித்துவிரட்டி விட்டு , மூன்றாவறு திருமணம் செய்ய அரவிந்த் தினேஷ் முயன்றுள்ளார். இதனை அறிந்து இரண்டு மனைவிகளும் அரவிந்த தினேஷை பிடித்து அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Watch

First published: September 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...