கோவை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் தேர்தல் அல்லாத பணிகளுக்கு மாற்றம்

ராசாமணி ஐ.ஏ.எஸ்

கோவை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரை நியமித்தும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 • Share this:
  கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி மற்றும் காவல் ஆணையர் சுமித் சரண் ஆகியோரை தேர்தல் அல்லாத பணிகளுக்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

  சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் மீது தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இருவரையும் பணியிடம் மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

  கோவை மாவட்ட புதிய ஆட்சியராக எஸ்.நாகராஜன் மற்றும் காவல் ஆணையராக டேவிட் தேவாசீர்வாதம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  Published by:Vijay R
  First published: