ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கோவை கார் வெடிப்பு.. என்ஐஏ கைக்கு வந்த லிஸ்ட்.. கோவையை சல்லடை போடும் புலனாய்வு முகமை!

கோவை கார் வெடிப்பு.. என்ஐஏ கைக்கு வந்த லிஸ்ட்.. கோவையை சல்லடை போடும் புலனாய்வு முகமை!

கோவை கார் வெடிப்பு

கோவை கார் வெடிப்பு

20 க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

    கோவையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    கோயம்புத்தூர் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு தீபாவளிக்கு முந்தைய நாள் கார் வெடித்தது. இதில், காரில் இருந்த ஜமீஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அவரது வீட்டில் இருந்து நாட்டு வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதோடு,  ஐ.எஸ் அமைப்பிற்கு ஆதரவாக சில குறிப்புகள் கைப்பற்றபட்டு இருந்தது. ஒற்றை ஓநாய் தாக்குதல் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் தகவல் வெளியானது.

    இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தற்போது என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.  இந்நிலையில், கோவை கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர்,ரத்தினபுரி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கார் வெடிப்பு தொடர்பாகவும், ஐஎஸ் அமைப்பு தொடர்பாகவும் NIA தீவிரமாக விசாரனை நடத்தி வரும் நிலையில் சில பெயர்கள் அடங்கிய லிஸ்டை  வைத்தே NIA சோதனையை நடத்தி வருவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன

    இதையும் படிங்க: அரசாணை 115 குறித்த சர்ச்சை : புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் - தமிழக அரசு விளக்கம்

    கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பில் இருந்தவர்கள், தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகளில் இந்த சோதனையானது நடத்தப்படுகின்றது. உக்கடம் கோட்டை மேடு பகுதியில் சனோபர் என்பவரின் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்...

    சென்னை, கொச்சின் ஆகிய பகுதிகளில் இருந்து வந்துள்ள அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Published by:Murugesh M
    First published:

    Tags: Coimbatore, NIA