கோவை : பொங்கல், எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் நடைபெற்ற ரேக்ளா பந்தயம்

ரேக்ளா பந்தயம்

200 மீட்டர் ரேக்ளா போட்டியில் வெற்றி பெறுபவருக்கு புல்லட் வாகனமும், 300 மீட்டர் ரேக்ளா போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மாருதி காரும் பரிசாக வழங்கப்பட்டது.

 • Share this:
  கோவையில் எம்ஜிஆர் பிறந்த நாள் மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றன.இதில் இரு பிரிவுகளாக நடத்தப்படும் போட்டியில் 450 ஜோடி காளைகள் பங்கேற்றன.

  கோவையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் ரேக்ளா போட்டிகள் இன்று கொடிசியா சாலையில் நடைபெற்றது .இந்த ரேக்ளா போட்டிகளை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், மாநகர் மாவட்ட செயலாளருமான அம்மன் அர்ஜூனன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

  இந்த ரேக்ளா போட்டியில் பங்கேற்க 450 ஜோடி காளைகள் முன்பதிவு செய்யப்பட்டன. 200 மீட்டர்,300 மீட்டர் என இரு பிரிவுகளாக ரேக்ளா போட்டிகளானது நடைபெற்றது. 200 மீட்டர் ரேக்ளா போட்டியில் வெற்றி பெறுபவருக்கு புல்லட் வாகனமும், 300 மீட்டர் ரேக்ளா போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மாருதி காரும் பரிசாக வழங்கப்பட்டது.

  கோவை, திருப்பூர், ஈரோடு, சத்தியமங்கலம்,  கோபிசெட்டிபாளையம், நெல்லை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் பங்கேற்றன. இது தவிர 100 பேருக்கு சிறப்பு பரிசாக தங்ககாசு வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசாக வெள்ளி காசு வழங்கப்பட்டது.
  Published by:Vijay R
  First published: