Home /News /tamil-nadu /

சீசன் முடிந்தும் குற்றாலத்தில் கூடும் கூட்டம்.. அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்!

சீசன் முடிந்தும் குற்றாலத்தில் கூடும் கூட்டம்.. அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்!

 குற்றாலத்தில் கூடும் கூட்டம்

குற்றாலத்தில் கூடும் கூட்டம்

சீசன் முடிந்த நிலையிலும் குற்றால அருவிகளில் நீர்வரத்து வருவதினால் இங்கு வரும் பயணிகள் உற்சாகமாய் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Courtalam (Courtallam), India
    சீசன் முடிந்த நிலையில் வார விடுமுறையால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அனைத்து அருவிகளிலும் நீர் வரத்தால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாய் அருவியில் குளித்துவிட்டு மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.

    தென்காசி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் காலமாகும். இந்தாண்டு வடகிழக்கு பருவமழையால் பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து இருந்ததால் இங்கு வரும் பயணிகள் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்து சென்றனர். இந்தாண்டில் கடந்த 3 மாதங்களாக சீசன் களைகட்டிய நிலையில் பல பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் வந்து குளித்து மகிழ்ச்சியுடன் சென்றனர்.

    குற்றாலம்


    இந்த நிலையில் தற்போது சீசன் முடிந்த நிலையிலும் குற்றால அருவிகளில் நீர்வரத்து வருவதினால் இங்கு வரும் பயணிகள் உற்சாகமாய் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். மேலும் இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறும்போது தற்போது சீசன் முடிந்த நிலையில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து ஆர்ப்பரித்து வருகின்றது. இன்று வாரவிடுமுறை தினம் என்பதால் கூட்டம் இருந்தாலும் அருவியில் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்து செல்வதாகவும் தெரிவித்தனர் .

    செய்தியாளர் : ச.செந்தில்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Courtallam, Tenkasi

    அடுத்த செய்தி