Home /News /tamil-nadu /

தொடங்கியது குற்றால சீசன்... குளு குளு காற்றில் மகிழ்ச்சியுடன் குளியல் போடும் சுற்றுலாப் பயணிகள் 

தொடங்கியது குற்றால சீசன்... குளு குளு காற்றில் மகிழ்ச்சியுடன் குளியல் போடும் சுற்றுலாப் பயணிகள் 

 குற்றால அருவி

குற்றால அருவி

Courtallam season | குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து துவங்கியதால் முன்கூட்டியே சீசன் துவங்கியுள்ள நிலையில் சுற்றுலாப்பயணிகள் அருவியில் ஆனந்தமாய் குளித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கியதால் தொடர்ந்து குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த வருடம் சீசன் கலைக்கட்டியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டும். இதனை அனுபவிக்க உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள்.

    இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா தொற்று காரணமாக சுற்றுலாத் தலமான குற்றால அருவிகளில், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தனர். இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் இதனை நம்பி இருந்த வியாபாரிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்ட நிலையில் இங்குள்ளோர் மாவட்ட ஆட்சியருக்கும், அரசுக்கும் அருவியில் குளிக்க அனுமதி வேண்டினர்.

    இதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசு கட்டுப்பாடுகளுடன் அருவியில் குளிப்பதற்கு அனுமதி அளித்தனர். கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீரின்றி வறண்டு காணப்பட்டது.



    இந்தநிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே துவங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து மலைப்பகுதியில் பெய்த மழையால் பிரதான அருவி, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து துவங்கியதால் முன்கூட்டியே சீசன் துவங்கியுள்ள நிலையில் சுற்றுலாப்பயணிகள் அருவியில் ஆனந்தமாய் குளித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, கடந்த சில தினங்களாக அருவியில் தண்ணீர் இன்றி காணப்பட்ட நிலையில் தற்போது அருவிகளில் நீர்வரத்து காண்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இந்த சீசன் தொடர்ந்து நீடிக்க வேண்டும் எனவும் அருவி பகுதியில் குளிர்ச்சியான சீதோஷண நிலையும் சாரல் மழை பெய்வதால் மனதுக்கு இதமாக இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    ச.செந்தில், செய்தியாளர்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Courtallam, Tamil News, Tenkasi

    அடுத்த செய்தி