பருப்பு விவகாரம்: ராமதாஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து

News18 Tamil
Updated: August 9, 2019, 12:58 AM IST
பருப்பு விவகாரம்: ராமதாஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து
பாமக நிறுவனர் ராமதாஸ்
News18 Tamil
Updated: August 9, 2019, 12:58 AM IST
பாமக நிறுவனர் ராமதாஸ் மீதான அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

பருப்பு கொள்முதலில் முறைகேடு செய்ததால் அரசுக்கு 730 கோடி இழப்பு ஏற்பட்டதாக 2014 ஆம் ஆண்டு ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார். இதற்கு எதிராக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் 2015-ல் ராமதாஸ் மனுதாக்கல் செய்தார். இதில் அமைச்சரை குறிப்பிட்டு குற்றச்சாட்டு வைக்கவில்லை என்ற ராமதாஸ் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, அவதூறு வழக்கை ரத்து செய்தார்.
First published: August 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...