வாகனங்களின் வெளிப்புறத்தில் தெரியும்படி ஒட்டப்பட்டுள்ள படங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

வாகனம்

வாகனங்களில் அரசியல் கட்சி கொடிகளை தேர்தல் நேரங்களில் பயன்படுத்தலாமே தவிர மற்ற நேரங்களில் பயன்படுத்துவது ஏற்கத்தக்கது அல்ல.

 • Share this:
  கார் உள்ளிட்ட வாகனங்களில் வெளிப்புறத்தில் தெரியும்படி தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் படங்கள் ஒட்டப்பட்டிருந்தால் அதனை 60 நாட்களில் அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

  மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, வாகனங்களின் வெளிப்புறத்தில் தெரியும்படி தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் படங்கள் ஒட்டப்பட்டிருந்தால் அதனை 60 நாட்களில் அகற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  மேலும், வாகனங்களில் அரசியல் கட்சி கொடிகள் மற்றும் கட்சி தலைவர்களின் புகைப்படங்களை, அரசியல் கட்சியினர் தேர்தல் நேரங்களில் பயன்படுத்தலாமே தவிர மற்ற நேரங்களில் பயன்படுத்துவது ஏற்கத்தக்கது அல்ல எனறும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

  Must Read : தமிழகத்தில் திருவிழா, அரசியல் கூட்டங்களுக்கு அக்டோபர் 31 வரை தடை

  வாகனங்களில் தடைசெய்யப்பட்ட ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் விதிமுறை மீறிய நம்பர் பிளேட்களை நீக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: