Home /News /tamil-nadu /

வேலூர் மாவட்ட ஆட்சியர் காரை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

வேலூர் மாவட்ட ஆட்சியர் காரை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

கோப்பு படம்

கோப்பு படம்

வேலூரில் கையகப்படுத்தப்பட்ட தனியார் நிலத்துக்கு இழப்பீடு வழங்க தாமதமானதால் மாவட்ட ஆட்சியர் காரை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    வேலூர் மாவட்டம் கேரணாபட்டு பாலாறு பகுதியில் ஆதிதிராவிடர் நல சார்பில் குடியிருப்பு கட்டுவதற்காக சுமார் 7 ஏக்கர் நிலம் கடந்த 1999-ம் ஆண்டு கண்டறியப்பட்டு 2003-ம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இருந்தவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.50,000 இழப்பீடாக அரசு சார்பில் வழங்கப்பட்டது.

    அப்போது அந்த இடத்தில் நீலகண்டன் என்பவருக்கு சொந்தமான சுமார் ஒன்றரை ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அவருக்கும் ஏக்கருக்கு ரூ.50,000 வழங்கப்பட்ட நிலையில் நீலகண்டன் இந்த பணம் போதாது என்றும் அந்த இடத்திற்கு தற்போது விலை போகும் மதிப்பில் பணம் தரவேண்டுமென்று 2004-ம் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு இழப்பீடாக வட்டியுடன் சேர்த்து ரூ.2,50,000 கொடுக்க வேண்டுமென உத்தரவிட்டது. ஆனால் இதுவரை இழப்பீடு வழங்காத நிலையில் நீலகண்டன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேலூர் மாவட்ட ஆட்சியர் கார் மற்றும் அலுவலகத்தில் இருக்கும் மேஜை, டேபிள், நாற்காலி ஆகியவற்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.



    இதையடுத்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நீலகண்டன் மற்றும் அவரது வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியர் கார், டேபிள் ஆகியவற்றை ஜப்தி செய்ய முயற்சி செய்தனர். இதையடுத்து அங்கு வந்த அரசு அதிகாரிகள் நீலகண்டனின் வழக்கறிஞர் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Vellore

    அடுத்த செய்தி