• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மணல் எடுப்பதற்கு எந்த விதிகளின் கீழ் அனுமதி வழங்கப்படுகிறது? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

மணல் எடுப்பதற்கு எந்த விதிகளின் கீழ் அனுமதி வழங்கப்படுகிறது? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
    தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள வண்டல் மண்களை எடுப்பதற்கு எந்த விதிகளின் கீழ் அனுமதி வழங்கப்படுகிறது? என்பது குறித்து 2 வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேட்டூர் அணையிலிருந்து வண்டல் மணலை எடுப்பதற்கு விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

    இந்த அரசாணையை மீறி செங்கற்சூளைகளுக்கு சட்ட விரோதமாக அதிகளவில் வண்டல் மண் அள்ளப்படுவதாக திராவிட விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்..

    இந்த வழக்கு நீதிபதிகள் வினித்கோத்தாரி மற்றும் அனிதா சுமத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, அனுமதிக்கப்பட்ட ஒரு மீட்டர் அளவை தாண்டி சட்ட விரோதமாக லாரி லாரியாக வண்டல் மண் எடுக்கப்படுவதால் இயற்கை வளம் பாதிக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

    இது சம்பந்தமாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை கண்டிப்புடன் அமுல்படுத்த வேண்டும் எனவும் விதியை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மேட்டூர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் வண்டல் மண் எடுப்பதற்கு எந்த விதிகளின் கீழ் அனுமதி வழங்கப்படுகிறது? அனுமதி வழங்கும் அதிகாரி யார் என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு இரண்டு வாரத்தில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: