அரசு நிலம் அபகரிப்பு புகார் - செயின்ட் பேட்ரிக் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

கடந்த 2005-ம் ஆண்டு நிலத்தின் உரிமையை பள்ளி நிர்வாகத்திற்கு வழங்கிய சிவில் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தனர்.

news18
Updated: August 10, 2019, 9:54 AM IST
அரசு நிலம் அபகரிப்பு புகார் - செயின்ட் பேட்ரிக் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!
செயின்ட் பேட்ரிக் பள்ளி
news18
Updated: August 10, 2019, 9:54 AM IST
சென்னை அடையாறில் செயல்பட்டு வரும் செயின்ட் பேட்ரிக் பள்ளி நிர்வாகம் 400 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை அபகரித்த விவகாரத்தில்
சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை அடையாறில செயின்ட் பேட்ரிக் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் செயின்ட் பேட்ரிக் பள்ளி,


கடந்த 2005-ம் ஆண்டு தங்கள் பள்ளிக்கு அருகாமையில் இருந்த அரசுக்கு சொந்தமான ( 5 .25) ஏக்கரை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போலியான ஆவணங்களை சமர்ப்பித்து நிலத்திற்கான உரிமையை பெற்றது.

சிவில் நீதிமன்றத்தின் உத்தரவை அடிப்படையாக வைத்து சம்பந்தப்பட்ட நிலத்திற்கு பட்டா வழங்க உத்தரவிட கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் கடந்த 2013-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த
வழக்கை விசாரித்த தனி நீதிபதி பள்ளி நிர்வாகம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

Loading...

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து பள்ளி நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி, சி.வி கார்த்திகேயன் அமர்வு,

தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததோடு, சிவில் நீதிமன்றம் இந்த வழக்கை முழுவதுமாக விசாரணை செய்யாமல், எந்த ஒரு ஆதாரங்களையும் ஆராயாமல் பொத்தம் பொதுவாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக கண்டனம் தெரிவித்தனர்.

கடந்த 2005-ம் ஆண்டு நிலத்தின் உரிமையை பள்ளி நிர்வாகத்திற்கு வழங்கிய சிவில் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தனர். மேலும்,தமிழக அரசு சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை எனவும் உத்தரவிட்டனர்.

Also see...

First published: August 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...