கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து எம்.எல்.ஏ கு.க.செல்வம் மனு - பதிலளிக்கும்படி திமுக தலைவர், பொதுச்செயலாளருக்கு உத்தரவு

தன்னை கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து எம்.எல்.ஏ - கு.க.செல்வம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, திமுக தலைவர், பொதுச்செயலாளருக்கு சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து எம்.எல்.ஏ கு.க.செல்வம் மனு - பதிலளிக்கும்படி திமுக தலைவர், பொதுச்செயலாளருக்கு உத்தரவு
கு.க. செல்வம் எம்.எல்.ஏ.,
  • News18
  • Last Updated: September 10, 2020, 8:10 PM IST
  • Share this:
டில்லியில், பா.ஜ.க தலைவர் நட்டாவை சந்தித்தது, தமிழக பா.ஜ.க அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது போன்ற காரணங்களால், எம்.எல்.ஏ - கு.க.செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி, திமுக தலைமை, கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கு.க.செல்வம், சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், கட்சி சட்டதிட்டத்தின்படி, உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்க பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also read... கோயம்பேடு மொத்த பழங்கள் விற்பனை அங்காடியை திறக்கக் கோரும் வணிகர்கள் - ஒரு வாரத்தில் முடிவெடுக்க அரசிற்கு நீதிமன்றம் உத்தரவு


மேலும், கட்சி அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கமளித்தும், எந்த விசாரணையும் நடத்தாமல், தன்னை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாகவும் மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கூடுதலாக லிப்ட் அமைக்க வேண்டும் என்பதற்காகவே, ரயில்வே அமைச்சரை சந்திக்க சென்றதாகக் கூறியுள்ளார்.

டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது, பா.ஜ.வில் இணைய வரவில்லை என்பதை விளக்கியிருந்ததாகவும், ஆனால் தன்னை கட்சியில் இருந்து நீக்கியதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.இந்த மனுவை விசாரித்த 17வது உதவி நகர உரிமையியல் நீதிமன்றம், மனுவுக்கு செப்டம்பர் 18ம் தேதிக்குள் பதிலளிக்க திமுக தலைவர், பொதுச்செயலாளருக்கு உத்தரவிட்டது.
First published: September 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading