சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க என்ன நடவடிக்கை? - நீதிமன்றம் கேள்வி

மாதிரி படம்

மேட்டூர் அணையிலிருந்து வண்டல் மணலை எடுப்பதற்கு விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் சட்ட விரோதமாக வண்டல் மண்கள் அள்ளப்படுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கபடும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து வண்டல் மணலை எடுப்பதற்கு விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை மீறி செங்கற்சூளைகளுக்கு சட்ட விரோதமாக அதிகளவில் வண்டல் மண் அள்ளப்படுவதாக திராவிட விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்..

இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் அனிதா சுமத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, அனுமதிக்கப்பட்ட ஒரு மீட்டர் அளவை தாண்டி சட்ட விரோதமாக லாரி லாரியாக வண்டல் மண் எடுக்கப்படுவதால் இயற்கை வளம் பெரிதும் பாதிக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கபட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து, மேட்டூர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் சட்டவிரோதமாக வண்டல் மண் அள்ளப்படுவதை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை குறித்து இரண்டு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கபடும் என அரசுக்கு எச்சரித்து விசாரணை ஜனவரி 7-ம் தேதி ஒத்தி வைத்தனர்.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published: