திருட்டு வழக்கில் கைதான பெண்ணை ₹50 அபராதம் விதித்து விடுதலை செய்த நீதிமன்றம்

News18 Tamil
Updated: August 1, 2019, 10:56 PM IST
திருட்டு வழக்கில் கைதான பெண்ணை ₹50 அபராதம் விதித்து விடுதலை செய்த நீதிமன்றம்
News18 Tamil
Updated: August 1, 2019, 10:56 PM IST
ஏராளமான திருட்டு வழக்கில் தொடர்புடைய பெண்ணை தேவகோட்டை சார்பு நீதிமன்றம் 50 ரூபாய் அபராதம் விதித்து விடுதலை செய்தது போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை சேர்ந்த மஞ்சுளா மீது ஏராளமான பிக் பாக்கெட் மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த மே மாதம் சிவகங்கை மாவட்டம் புளியால் அருகே பேருந்தில் ஆயிரம் ரூபாய் திருடிய போது மஞ்சுளாவை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து தேவகோட்டை போலீசிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.

போலீசார் மஞ்சுளா மீது வழக்கு பதிந்து தேவகோட்டை சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருக்கின்றனர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றத்தை ஒப்புக்கொண்ட மஞ்சுளாவுக்கு 50 ரூபாய் அபராதம் விதித்து அவரை விடுதலை செய்தார்.


First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...