அரியலூரில் நீதிமன்ற அறையில் ஊழியர் தற்கொலை.. சிக்கிய பகீர் கடிதம்...
அரியலூரில் பணிக்கு சென்ற நீதிமன்ற ஊழியர் திடீரென தனது அறையில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். புற்றுநோய் அச்சத்தின் காரணமாக தற்கொலை செய்ததாக அவர் கடிதம் எழுதி வைத்தது உண்மையா?
- News18 Tamil
- Last Updated: January 9, 2021, 11:18 AM IST
நீதிமன்ற ஊழியரான நெடுஞ்செழியன், தனது உடல்நலக் குறைவால் அச்சம் கொண்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளார். அவரது தற்கொலைக்கு உடல்நலக் குறைவு காரணமா? அவரை சிலர் கேலி கிண்டல் செய்தது காரணமா?
அரியலூர் பெருமாள் கோவில் தெருவில் உள்ள சிறப்பு குடும்ப நல நீதிமன்றத்தில் அலுவலராக 57 வயதான நெடுஞ்செழியன் பணிபுரிந்து வந்தார். இவர், பெரம்பலூர் மாவட்டம் கீழப்பெரம்பலூர் கிராமத்தில் மனைவி, மகன் மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்தார். வியாழக் கிழமை நீதிமன்ற கோப்புகளை பார்ப்பதாகக் கூறிவிட்டு தனது அறைக்குச் சென்றார் நெடுஞ்செழியன்.
நீண்ட நேரமாகியும் நெடுஞ்செழியன் தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த சக பணியாளர்கள் உள்ளே சென்று பார்த்த போது, மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். அதிர்ச்சி அடைந்த நீதிமன்றப் பணியாளர்கள் இதுகுறித்து அரியலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற அரியலூர் போலீசார் நெடுஞ்செழியனின் உடலை அகற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த 15 நாட்களாக உடல்நலக்குறைவால் விடுப்பு எடுத்திருந்த நெடுஞ்செழியன், கடந்த 4ஆம் தேதி தான் பணியில் சேர்ந்தார் என்பது தெரியவந்தது.
மேலும் அவரது சட்டைப் பையில் இருந்து அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில், 2004ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்து காலகட்டத்திலும் 2007ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாத போதும் நீதிமன்றத்தின் மூலம் சிகிச்சை பெற நடவடிக்கை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார் நெடுஞ்செழியன்.
அதேபோல் கொரோனா காலகட்டத்திலும் தனக்குப் பல்வேறு உதவிகள் கிடைத்ததாகவும் எழுதியுள்ளார். அதேநேரம், தனது உடல் எடை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே சென்றதால் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார்.தனக்கு புற்றுநோய் இருப்பதால் தான் உடல் எடை குறைந்து வருகிறதோ என்ற சந்தேகமும் ஏற்பட்டதாக அவர் எழுதியுள்ளார். அதனால் குடும்பத்திற்கு சுமையாக இருக்க விரும்பாமல் தற்கொலை செய்து கொள்வதாக கடிதத்தின் இறுதியில் நெடுஞ்செழியன் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
மேலும் படிக்க...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் முன் என்ன சாப்பிட வேண்டும்?
இதற்கிடையே, நெடுஞ்செழியனை சிலர் உடல்நலக் குறைவைச் சுட்டிக் காட்டி கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் மனமுடைந்த நெடுஞ்செழியன் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலுார் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
அரியலூர் பெருமாள் கோவில் தெருவில் உள்ள சிறப்பு குடும்ப நல நீதிமன்றத்தில் அலுவலராக 57 வயதான நெடுஞ்செழியன் பணிபுரிந்து வந்தார். இவர், பெரம்பலூர் மாவட்டம் கீழப்பெரம்பலூர் கிராமத்தில் மனைவி, மகன் மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்தார். வியாழக் கிழமை நீதிமன்ற கோப்புகளை பார்ப்பதாகக் கூறிவிட்டு தனது அறைக்குச் சென்றார் நெடுஞ்செழியன்.
நீண்ட நேரமாகியும் நெடுஞ்செழியன் தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த சக பணியாளர்கள் உள்ளே சென்று பார்த்த போது, மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். அதிர்ச்சி அடைந்த நீதிமன்றப் பணியாளர்கள் இதுகுறித்து அரியலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.