முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யாவுக்கு எதிரான மனு: லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

கோப்புப் படம்

பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா, மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அரவிந்தாக்ஷன்   உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்

 • Share this:
  சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ, தி.நகர் சத்ய நாராயணன் மீது வழக்குப்பதிய கோரிய மனுவுக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  முந்தைய ஆட்சியில், சென்னை தியாகராய நகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த சத்தியநாராயணன், தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழித்ததில் முறைகேடு செய்துள்ளதாக ராயபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்தாக்ஷன் என்பவர், லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்திருந்தார்.

  அதில், மேற்கு மாம்பலம் பகுதியில் அம்மா உள்விளையாட்டு அரங்கம் கட்ட 2016-17 ம் ஆண்டில் 5 கட்டங்களாக நிதி ஒதுக்கி ஒரு கோடி ரூபாய் செலவு செய்ததில் முறைகேடு செய்ததாகவும், 2018-19- ம் நிதியாண்டில் மேற்கு மாம்பலம்,காசி குளம் பகுதியில் கட்டிடமே கட்டாமல் 30 லட்சம் செலவு செய்தது குறித்தும், 2017-18 ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் நிதியில்
  சட்டத்திற்கும், அரசாணைக்கும் புறம்பாக 2 கோடி ரூபாய்க்கு வெறும் சாலை அமைக்கும் பணிகள் மட்டுமே மேற்கொண்டதாகவும் கூறியிருந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், இந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா, மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அரவிந்தாக்ஷன்   உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

  மேலும் படிக்க: வடிவேலு பாணியில் கைதியிடம் இருந்து  திருடிய போலீஸ்...

  இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், ஜூன் 27ம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்கும்படி, லஞ்சஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
  Published by:Murugesh M
  First published: