Home /News /tamil-nadu /

சுங்க கட்டண உயர்வு காரணமாக கூரியர், பார்சல் சேவை கட்டணங்கள் உயர்ந்தன

சுங்க கட்டண உயர்வு காரணமாக கூரியர், பார்சல் சேவை கட்டணங்கள் உயர்ந்தன

பார்சஸ் சர்விஸ்

பார்சஸ் சர்விஸ்

சுங்க கட்டண உயர்வால் ஏற்படும் கூடுதல் நிதி சுமையை சமாளிக்கும் வகையில், பார்சல் கட்டணத்தை நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சுங்க கட்டணம் உயர உள்ள நிலையில், இழப்பை ஈடு செய்ய  பிரபல நிறுவனங்கள் பார்சல் மற்றும்  கூரியர் கட்டணங்களை, 30 ரூபாய் முதல், 300 ரூபாய் வரை உயர்த்தி உள்ளன.

    தமிழகத்தை பொறுத்தவரை நெடுஞ்சாலைகளில் 50 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் வருடம்தோறும் இரு கட்டமாக கட்டணங்கள் உயர்த்தப்படும். ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 22 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள 28 சுங்கச்சாவடிகளில், நாளை முதல் சுங்கக்கட்டணம் உயருகிறது.

    இதையடுத்து, பார்சல், கூரியர் சேவைக்கான கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் 120க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்  பார்சல், கூரியர் சேவையில் ஈடுப்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் பயன் படுத்தும் லாரிகள், சரக்கு ஆட்டோக்களுக்கான டீசல், உதிரிபாகங்கள், இரண்டாம் நபர் காப்பீட்டுத் தொகை அதிகரிப்பு, சுங்க கட்டணம், தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு ஆகியவற்றின் காரணமாக, கட்டணங்களை படிப்படியாக உயர்த்தி வந்தன.

    இதையும் படிங்க: தமிழகத்தில் 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டண உயர்வு

    இந்நிலையில்,  வியாழக்கிழமை  முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வர உள்ளது. இக்கட்டண உயர்வால் ஏற்படும் கூடுதல் நிதி சுமையை சமாளிக்கும் வகையில், பார்சல் கட்டணத்தை நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. 10 கிலோ எடை கொண்ட பார்சலுக்கான கட்டணம், 400 கிலோ மீட்டர்  துாரம் வரை, 150 ரூபாயாக இருந்த நிலையில், 170 ரூபாயாகவும், 600 கிலோ மீட்டர்  துாரம் வரை, 170 ரூபாயாக இருந்த கட்டணம், 200 ரூபாயாகவும்  அதிகரிக்கப்பட்டுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Price hike, Toll Plaza

    அடுத்த செய்தி