Home /News /tamil-nadu /

'ஒருத்தர ஏமாத்தணும்னா அவங்க ஆசைய தூண்டணும்...' - திருப்பூரில் நூதன மோசடி

'ஒருத்தர ஏமாத்தணும்னா அவங்க ஆசைய தூண்டணும்...' - திருப்பூரில் நூதன மோசடி

?????

?????

  • News18
  • Last Updated :
    திருப்பூரில் 2000க்கும் மேற்பட்ட பனியன் தொழிலாளர்களிடம் நூதன முறையில் பண மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர் மாநகரின் ஒவ்வொரு பகுதியாக களமிறங்கிய ராஜேஷ் , ராஜேஸ்வரி என்ற இருவரும் ஒரு பகுதியில் தங்கி அப்பகுதி மக்களிடம் கடன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதுவும் கலர் டிவி, எல்.ஈ.டி டிவி, ஒரு லட்சம் கடன் எனப் பலவிதமாக ஆசைகளைத் தூண்டும் விதமாக அவர்கள் பேசியுள்ளனர். இதனைத்தொடர்ந்து பேச்சில் மயங்கியவர்களை அழைத்து கொண்டு டிவி ஷோ ரூமிற்கு சென்றுள்ளனர்.

    அங்கு சென்ற அவர்கள் மக்களின் ஆவணங்களை சமர்ப்பித்து முன்பணத்தை கட்டி தொலைக்காட்சியை பெற்று கொண்ட தம்பதியர், எஞ்சிய பணத்தை செலுத்தி விட்டு தொலைக்காட்சி பெட்டிகளை எடுத்து கொள்ளும்படி கூறியுள்ளனர்.



    மேலும் சான்றிதழ் பூர்த்திக்காக ஒவ்வொருவரிடமும் ராஜேஸ்வரி தலா ரூ.2000 பெற்றுள்ளார். இதுமட்டுமில்லாமல் ஆவணங்கள் வைத்து பஜாஜ் நிறுவனத்தில் பணம் வாங்கியதால், அடுத்த மூன்று மாதங்களுக்கு சம்பந்தப்பட்ட மக்கள் கடன் தொகையை வட்டியுடன் செலுத்தி வந்துள்ளனர்.

    இந்நிலையில் பேசியபடி தொலைக்காட்சியையும், கடன் தொகையையும் தராக தம்பதியினர் சொல்லாமல் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளனர். 11 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் டிவிக்களை கேட்டும் கிடைக்காத நிலையில் இருவர் மீதும் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

    பொதுமக்களின் புகாரையடுத்து ராஜேஷ், ராஜேஷ்வரி இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 2000க்கும் மேற்பட்டவர்கள் இவர்களால் ஏமாற்றப்பட்டு கடன் தொகையை பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்திலும் செலுத்தி வருகின்றனர்.
    Published by:Saroja
    First published:

    Tags: Cheated, Couples, Loan, Sathuranga vettai, Tirupur

    அடுத்த செய்தி