சமூக சேவையில் பல ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வருபவர்கள் லயோலா மணி மற்றும் அனிதா. இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை வடபழனியில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
மேடையில் தாலி கட்டிய உடனே மணமக்கள் இருவரும் தங்கள் நண்பர்களுடன் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்தனர். அங்கு கடற்கரைப் பகுதியில் பனைமரம் நட்டு தங்கள் சமூகப் பணியைத் தொடர்ந்தனர். ஏராளமான பனை விதைகளை கடற்கரைப் பகுதி முழுக்க ஆங்காங்கே மணமக்கள் நட்டு வைத்தனர். ஏற்கனவே ’காக்கை’ என்ற அமைப்பு பல லட்சக்கணக்கான பனைமரங்களை நட்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக மணமக்கள் தங்களது பங்களிப்பை இதில் உறுதி செய்துள்ளனர்.
Also read: ’கல்விக்கடவுளே...’ கோவையில் முதல்வரை வாழ்த்தி அரியர் மாணவர்கள் போஸ்டர்
இதுகுறித்து மணி மற்றும் அனிதாவிடம் பேசியபோது, பனை மரம் என்பது தமிழர்களுக்கான மரம். பல்வேறு பலன்களை தரக்கூடிய மரம் இன்றைக்கு அழிந்து வருகிறது. எனவே பனைமரங்களை மீட்டெடுப்பதற்கான முயற்சி இது. திருமணம் முடித்த கையோடு பனைமரம் நடுவது ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தில் வந்ததாகக் கூறினர்.
இத்தோடு நின்றுவிடாமல் தொடர்ந்து கடற்கரை பகுதிக்கு வந்து அவ்வப்போது தண்ணீர் ஊற்றி இதைப் பராமரிப்பு செய்யவும் தம்பதியர் முடிவு செய்துள்ளனர். ஊரடங்கு காலத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு சமையல் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான உதவிகளை இருவரும் தொடர்ந்து செய்து வந்துள்ளனர். திருமண கோலத்தில் கடற்கரையில் இவர்கள் பனைமரம் நட்டதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.