பனியன் தொழிலை விடுத்து விதைப்பந்து தயாரிக்கும் தொழிலில் வெற்றி அடைந்த தம்பதி

திருப்பூரில் பனியன் தொழிலை விடுத்து விதைப்பந்து தயாரிக்கும் தொழிலில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளனர் ராமசாமி - பத்மபிரியா தம்பதி

பனியன் தொழிலை விடுத்து விதைப்பந்து தயாரிக்கும் தொழிலில் வெற்றி அடைந்த தம்பதி
விதைப்பந்து தயாரிக்கும் தொழிலில் வெற்றி அடைந்த தம்பதி
  • News18
  • Last Updated: August 31, 2020, 12:54 PM IST
  • Share this:
திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த முத்தம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (37), இவரது மனைவி பத்மப்ரியா (32) பனியன் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டிருந்த இவர் கடந்த 2015-ம் ஆண்டு விதைப்பந்து தயாரிப்பு குறித்த கட்டுரை ஒன்றை படித்துள்ளார்.

இதுகுறித்து தனது மனைவியிடமும் தெரிவித்து விதைப்பந்து தயாரிப்பு தொழிலில் ஈடுபட முயன்றுள்ளார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் விதைப்பந்து தயாரிப்பு தொடர்பான தகவல்களை சேகரித்த இவர்கள் 2018 ஆம் ஆண்டு முதன் முறையாக விதைப்பந்து தயாரிக்க துவங்கினர்.

திருமணம் சுப விசேஷங்கள் போன்றவற்றிற்கு தாம்பூலம் வழங்குவது பாரம்பரிய வழக்கமாக இருந்து வரும் நிலையில் இவற்றில் விதைப்பந்துகளை பரிசாக அளிப்பதன் மூலம் மரம் வளர்க்கும் பழக்கம் ஏற்படும் என்ற ஒரு கருத்தை அடிப்படையாகக் கொண்டு இவர் தனது தொழிலை துவக்கினார்.


Also read... பிரசாந்த் பூசனுக்கு ₹ 1 அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - கட்டத்தவறினால் 3 மாதம் சிறை

முதல் ஆர்டர் கிடைத்த நிலையில் அப்போதைய காலகட்டத்தில் பனியன் தொழில் இவர்களுக்கு பெரிய அளவில் வருமானம் தராத காரணத்தால் தனது இருசக்கர வாகனத்தை அடகு வைத்து அதன் மூலம் கிடைத்த பணத்தில் தனது முதல் ஆர்டரை செய்து கொடுத்துள்ளார்.

இவர்களின் இந்த அணுகுமுறையும், தாம்பூலத்தில் இடம்பெற்ற விதைப்பந்து பலரையும் கவர்ந்ததால் தொடர்ந்து இவர்களுக்கு பல ஆர்டர்கள் கிடைத்தது. இதனால் தான் செய்து வந்த பனியன் தொழிலில் கைவிட்டு முழுநேரமாக விதைப்பந்து தயாரிக்கும் தொழிலில் இறங்கினர் ராமசாமி- பத்மப்பிரியா தம்பதி.வெளியே ஆர்டர்கள் சேகரிக்கும் பணியை ராமசாமி மேற்கொள்வதும் விதைப்பந்து தயாரிக்கும் பணியை பத்மபிரியா மேற்கொள்வது என பணியை இருவரும் விருப்பம்கொண்டு செயல் பட்டதன் காரணமாக இன்று 2500-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு 55 லட்சம் விதை பந்துகளை விற்பனை செய்துள்ளனர்.

முயற்சி பலன் அளித்ததால் 30 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் இவர்கள் உயர்ந்துள்ளனர். தரமான செம்மண் மாட்டுச்சாணம் மூலம் தயாரிக்கப்பட்ட இயற்கை உரம், தேங்காய் நார் என சரிவிகித அளவில் கலந்து தயார் செய்த கலவையில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வாகை, புங்கை வேப்பம் போன்ற மர வகைகள் மற்றும் காய்கறி பழவகைகள் என பலவிதமான விதைகளை கொண்டு விதை பந்துகளை உருவாக்குகின்றனர்.

மேலும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பேக்கிங் செய்து கொடுப்பதால் அவர்களும் மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர். ஒரு ரூபாய் முதல் விதைப்பந்துகளை இவர்கள் கொடுத்து வருகின்றனர். மரம் வளர்ப்பின் அவசியத்தை அனைவரும் உணர்ந்து வரும் நிலையில் விசேஷ நிகழ்ச்சிகளில்  விதைப்பந்துகள் வழங்குவது அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.
First published: August 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading