மூதாட்டியிடமிருந்து 90 சவரன் நகை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை - தம்பதி கைது

சென்னையில் வீட்டு வேலை பார்த்த இடத்தில் மூதாட்டியிடமிருந்து 90 சவரன் நகை கொள்ளையடித்து சொகுசாக வாழ்ந்துவந்த தம்பதியை போலீஸார் கைது செய்தனர்.

மூதாட்டியிடமிருந்து 90 சவரன் நகை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை - தம்பதி கைது
சென்னையில் வீட்டு வேலை பார்த்த இடத்தில் மூதாட்டியிடமிருந்து 90 சவரன் நகை கொள்ளையடித்து சொகுசாக வாழ்ந்துவந்த தம்பதியை போலீஸார் கைது செய்தனர்.
  • Share this:
சென்னை ஜாம்பஜார் பாரதி சாலையில் வசித்து வருபவர் வயது முதிர்ந்த பெண் டில்லி (75). இவர் தனது சகோதரியுடன் வாழ்ந்து வருகிறார். இவர்கள் திருமண நிகழ்ச்சிக்கான பாத்திரங்களை வாடகைக்கு விடும் தொழிலைச் செய்து வருகிறார்கள். இவரது வீட்டுக்கு பெரம்பூரைச் சேர்ந்த செல்வி என்பவர் கடந்த 2017ம் ஆண்டு முதல் வீட்டுவேலை செய்து வந்தார். இந்த நிலையில் செல்வியின் நடவடிக்கை சரியில்லாததால் டில்லி கடந்த 2019ம் ஆண்டு  டிசம்பர் மாதம் வேலையை விட்டு நிறுத்தியுள்ளார்.

மேலும், டில்லிக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் கடந்த ஜனவரி மாதம் மேல்தளத்தில் வைத்திருந்த பீரோவைப் பார்த்தபோது அதிலிருந்த 90 சவரன் நகைகள், 3 லட்ச ரூபாய் பணம், 7 கிலோ வெள்ளி பொருட்கள் காணாமல் போயுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

ஆனால் வயது மூப்பின் காரணமாகவும், கொரோனா தொற்று பரவி இருந்ததாலும் காவல் நிலையத்திற்குச் சென்று புகாரளிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3ம் தேதி டில்லி அண்ணா சாலை காவல் நிலையத்திற்கு புகாரளித்துள்ளார். இப்புகாரில் பணிப்பெண் செல்வி மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.


அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில், வேலைக்காரப் பெண் செல்வி மற்றும் அவரது கணவர் சரவணன் ஆகியோர் இணைந்து வீட்டிலிருந்த பணம், 90 சவரன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் திருடியிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, கணவன் மனைவி இருவரையும் கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

Also read: போதைப் பொருள் குற்றச்சாட்டு: நிக்கி கல்ராணி சகோதரி வீட்டில் போலீசார் சோதனைAlso read: கியூப் கட்டணம்: விளம்பர வருவாயில் பங்கு - திரையரங்கு உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய நிபந்தனைகள்

விசாரணையில் வீட்டு உரிமையாளரான டில்லி என்ற வயது முதிர்ந்த பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லாததாலும், சந்தேகம் வராமல் இருப்பதற்காகவும் சிறுகச் சிறுக நகை மற்றும் பணத்தைத் திருடியதாக செல்வி ஒப்புக்கொண்டுள்ளார். திருடிய பணத்திலிருந்து தனது வீட்டுக்குத் தேவையான டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பொருட்களை வாங்கியுள்ளார் என்பதும், திருடிய பணத்தைக் கொண்டு அப்பகுதி மக்களிடம் வட்டித் தொழிலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

மேலும் விசாரணையில், திருடிய நகையை பல்வேறு கடைகளில் விற்று அந்த பணத்திலிருந்து 2 ஆட்டோக்கள் வாங்கி உள்ளதும், நெற்குன்றம் அடுத்து வீட்டு மனை ஒன்றை வாங்குவதற்காக ரூபாய் 13 லட்சம் முன்பணம் கொடுத்திருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட கணவன் மற்றும் மனைவியிடமிருந்து ரூபாய் 11.5 லட்சம் பணம், 17 சவரன் நகை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.
First published: September 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading