குழந்தைக்காக பிரார்த்திப்போம்!... சுர்ஜித்துக்காக நாடே துடித்துக் கொண்டிருக்கிறது - தமிமுன் அன்சாரி

குழந்தைக்காக பிரார்த்திப்போம்!... சுர்ஜித்துக்காக நாடே துடித்துக் கொண்டிருக்கிறது - தமிமுன் அன்சாரி
  • News18
  • Last Updated: October 28, 2019, 10:31 AM IST
  • Share this:
சிறுவன் சுர்ஜித்துக்காக இந்த நாடே துடித்துக் கொண்டிருக்கிறது என்று தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி மூன்றாவது நாளாக தொடர்கிறது. குழந்தையை மீட்க 2 நாட்களாக மீட்புப் பணியினர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் பயனளிக்காததால் ரிக் என்று சொல்லக் கூடிய அதி நவீன இயந்திரங்களை கொண்டு வந்து குழந்தையை மீட்பதற்காக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவன் இருக்கும் ஆழ்துளை கிணற்றுக்கு அருகே 1 மீட்டர் அகழத்தில் குழி தோண்டப்பட்டு அதன் மூலம் குழந்தையை மீட்க மீட்புப் படையினர் போராடி வருகின்றனர். எனினும்


புதிதாக துளையிடப்படும் குழியில் 25 அடியில் இருந்து 90 அடி வரை பாறையாக உள்ளது. பாறைகள் உள்ளதால் துளையிடுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

மீட்புப் பணியின் போது இயந்திரம் 2 முறை பழுதாகி மீண்டும் சரி செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ராமநாதபுரத்தில் இருந்து புதிய இயந்திரம் கொண்டு வரப்படுகிறது. இதனால் சிறுவன் சுர்ஜித்தை மீட்பதில் தாமதம் ஏற்படும் என்று தெரிகிறது

இதுகுறித்து தமிமுன் அன்சாரி, ‘ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடும் குழந்தை சுர்ஜித்தின் மீட்சிக்காக நாடே துடித்துக் கொண்டிருக்கிறது. அக்குழந்தை அனைவரின் குடும்ப சொத்தாக மாறி அன்பின் அலையில் மூழ்கியிருக்கிறது. இந்நிலையில் அனைத்து மத மக்களும் அவரவர் மத நம்பிக்கையின் அடிப்படையில் அக்குழந்தை மீண்டு வர பிரார்த்திக்க வேண்டுகிறோம். அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்றைய லுஹர் (நண்பகல்) மற்றும் அஸர் (மதியம்) தொழுகைகளின் போது சிறப்பு பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகிறோம். இப்பணியை ஜமாத்துகளும், மார்க்க அறிஞர்களும் முன்னெடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். இறைவன் அக்குழந்தையை உயிருடன் மீட்க அருள் புரியட்டும் என பிரார்த்திக்கிறோம்’ என்று கூறியுள்ளார்
First published: October 27, 2019, 12:44 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading